Breaking News

பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார மைத்திரி மீது குற்றச்சாட்டு.!

நாட்டில் அரசியல் நெருக்கடி ஏற்பட்ட நாளில் இருந்து ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன ரணில் விக்ரமசிங்கவை காட்டிகொடுத்தவாறு செயற்படு கின்றாா். 

மாறாக தன்னை படுகொலை செய் யும் சதித்திட்டத்தின் பின்னனியில் இந்தியாவின் 'றோ" புலனாய்வு உள்ள தாகவும் நாட்டிலும் உலகத்திலும் இலங்கை தொடர்பான நற்பேரை சீர ழிக்கும் வகையிலேயே செயற்பட் டாா் என  பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார குற்றம் சுமத்தியுள்ளார்.

அலரி மாளிகையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டாறு தெரிவித்துள் ளாா்.

கடந்த காலங்களில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது இந்தியா வின் 'றோ" அமைப்பு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கொலை செய் வதற்கான சதிதிட்டம் தீட்டியதாக அவரே அறிவித்தாக தகவல்கள் வெளியா கின.

ஜனாதிபதி அவ்வாறு அறிவித்திருந்ததை தொடந்து பிரதமர் ரணில்விக்ரம சிங்க இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டிருந் தார். அச் சந்தர்ப்பத்தில் கூட, 'றோ" மீதான ஜனாதிபதியின் குற்றச் சாட்டிலி ருந்து அவரை ரணில்விக்ரமசிங்க காப்பாற்றினாரே தவிர அவரை காட்டிக் கொடுக்கும் வகையில் செயற்படவில்லை.

ரணில் விக்ரமசிங்க தனிப்பட்ட பிரச்சினைகளுக்காக மற்றவர்களை காட்டி கொடுப்பவர் அல்ல. இந்திய விஜயத்தின் போதும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும் நாட்டினையும் பாதுகாத்தது மட்டுமல்லாமல் ஜனாதிபதி மீதான சேறு பூசல்களுக்கு கூட இடமளிக்கவில்லை.

ரணில் விக்ரமசிங்கவால் பாதுகாக்கப்பட்ட மைத்திரிபால சிறிசேன இன்று ரணிலுடன் வேலை செய்ய முடியாதென்பதை பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஏற்றுக்கொண்டாலும் அவரை பிரதமராக நியமிக்க முடியாது எனத் தெரிவித்துள்ளாா்.

ஆனால் தன்னைக் கொலை செய்யப்போவதாக அச்சுறுத்தலை விடுத்த மஹிந்த ராஜபக்ஷவுக்கு பிரதமர் பதவி வழங்கியுள்ளார்.