கடத்தல், கொலை கொள்ளைகளை மேற்கொண்ட கருணா சட்டத்தின் முன் நிறுத்தப்படுவாரா? - THAMILKINGDOM கடத்தல், கொலை கொள்ளைகளை மேற்கொண்ட கருணா சட்டத்தின் முன் நிறுத்தப்படுவாரா? - THAMILKINGDOM
 • Latest News

  கடத்தல், கொலை கொள்ளைகளை மேற்கொண்ட கருணா சட்டத்தின் முன் நிறுத்தப்படுவாரா?

  தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஒரு வரும் - கருணா என்ற விநாயகமூர்த்தி முரளிதரனும் கடுமையான வார்த் தைப் பிரயோகங்களால் ஒருவரையொருவர் பரஸ்பரம் குற்றம் சுமத்தியுள்ள னா்.

  மட்டக்களப்பு மாவட்டத்தின் செங்க லடி நகரில் பிரதேச மக்களால் முன் னெடுக்கப்பட்ட போராட்டத்தில் கல ந்துகொண்ட நிலையிலேயே இருவ ருக்கும் இடையிலான சொற்போர் நடைபெற்றுள்ளது.

  செங்கலி விவசாயிகள் உட்பட பிர தேச மக்கள் தமது உரிமையை வலி யுறுத்தி நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட தமிழ் தேசிய கூட்ட மைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரனும், கருணா என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனும் பரஸ்பரம் விமர்சன த்தை வெளியிட்டு, அரசியல் செய்ததை அவதானிக்க முடிந்தது.

  கிழக்கில் தமிழர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் அனைத்து நடவடிக்கை களுக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பினரே பொறுப்பு கூற வேண்டுமென ஆர்ப் பாட்டத்தில் கலந்துகொண்ட கருணா தெரிவித்துள்ளாா்.

  கருணாவின் கருத்துக்கு பதில் அளித்த தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளு மன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன், கடத்தல் கொலை கொள்ளை களை மேற்கொண்ட கருணா, சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார் எனவும் வலி யுறுத்தியுள்ளாா்.


  • Blogger Comments
  • Facebook Comments

  0 comments:

  Item Reviewed: கடத்தல், கொலை கொள்ளைகளை மேற்கொண்ட கருணா சட்டத்தின் முன் நிறுத்தப்படுவாரா? Rating: 5 Reviewed By: tamil2017
  Scroll to Top