மனைவியை பிரிந்தார் அமேசன் தலைவர்.! - THAMILKINGDOM மனைவியை பிரிந்தார் அமேசன் தலைவர்.! - THAMILKINGDOM
 • Latest News

  மனைவியை பிரிந்தார் அமேசன் தலைவர்.!

  அமேசான் தலைவர் ஜெஃப் பெசோஸ் மற்றும் அவரது மனைவி மெக்கென்சி ஆகியோர் 25 ஆண்டுகால திருமண வாழ்க்கைக்கு பிறகு விவாகரத்துப் பெற்று பிரிந்து விட்டதாக அவர்களது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.

  உலகின் பெரும் பணக்காரர்கள் பட்டி யலில் பல ஆண்டுகளாக முதல் இடத் தில் இருந்த பில்கேட்சை பின்னுக்கு தள்ளி சாதனை படைத்தவர் அமேசான் நிறுவனத்தின் தலைவர் ஜெப் பெசோஸ் (வயது 54) ஆவர். இவ ரது சொத்து மதிப்பு 137 பில்லியன் டாலர்கள் ஆகும்.

  இவருடைய மனைவி மெக்கென்சி (வயது 48). இவர் நாவலாசிரியர் ஆவார். இவர்களுக்கு திருமணமாகி 25 ஆண்டுகள் ஆகிறது. 3 ஆண் குழந்தைகள் உள் ளன மேலும் ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்துள்ளனா். 

  இந் நிலையில் இவர்கள் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டதாக தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். மேலும் திருமணமான தம்பதி களாக நல்ல வாழ்க்கை வாழ்ந்துள்ளோம்.

  எதிர்காலத்தில் பெற்றோர்களாக, நண்பர்களாக, பணித் திட்டங்களில் சேர்ந்து நண்பர்களாகவும் சேர்ந்து செயல்படுவோம். என்பதுடன் தனித்தனி வாழ்க் கையைத் தேர்ந்தெடுத்தாலும், நாங்கள் குடும்பமாக இருப்போமெனத் தெரி வித்துள்ளாா். 

  • Blogger Comments
  • Facebook Comments

  0 comments:

  Item Reviewed: மனைவியை பிரிந்தார் அமேசன் தலைவர்.! Rating: 5 Reviewed By: tamil2017
  Scroll to Top