தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பிக்களை அரசுடன் இணையுமாறு - சம்பிக்க! - THAMILKINGDOM தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பிக்களை அரசுடன் இணையுமாறு - சம்பிக்க! - THAMILKINGDOM
 • Latest News

  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பிக்களை அரசுடன் இணையுமாறு - சம்பிக்க!

  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பிக்களை அரசுடன் இணையுமாறு அமைச் சர் சம்பிக்க ரணவக்க அரசமைப்பு நிர்ணயச்சபையில் இன்று நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் தெரிவித்துள்ளாா்.

  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பிக் களும் அரசாங்கத்துடன் இணைய வேண்டும். அமைச்சுப் பதவிகளை பெற்று வடக்கு,கிழக்கு பகுதிகளுக்கு சேவை யாற்ற முன்வர வேண்டும்.

  கூட்டமைப்பு அரசாங்கத்துடன் இணைவதால், வடக்கு,கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ் மக்களின் கலை, கலாச்சார, பண்பாட்டு விழுமியங்களுக்கு எவ்வித அச்சுறுத்தலும், பாதிப்பும் ஏற்படப்போவதில்லை.

  அமரர். சௌமியமூர்த்தி தொண்டமான், ஆளுங்கட்சியில் அங்கம் வகித்ததால் மலையகத் தமிழ் மக்களின் கலாசாரத்துக்கு அச்சுறுத்தலோ, பாதிப்பு ஏற்பட் டதா? இல்லை.

  அதேபோல் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்தின் பங்காளிக் கட்சி யாக அங்கம் வகிப்பதால் முஸ்லிம் மக்களின் கலாசாரம், பண்பாட்டு விழு மியங்களில் எதாவது மாற்றம் ஏற்பட்டுள்ளதா?

  இல்லை. எனவே, எதிர்ப்பு அரசியலைக் கைவிடுத்து, வடக்கு, கிழக்கு மாகா ணங்களை கட்டியெழுப்ப அரசாங்கத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இணைய வேண்டும்.

  கடந்த 50 வருடங்களில் வடக்கு பகுதியில் பெரிதாக எவ்வித தொழிற்சாலை யும் உருவாகவில்லை. வேலையில்லாப் பிரச்சினையும் தீர்க்கப்படவில்லை. அதேவேளை, காலைநிலை மாற்றத்தால் இன்னும் 40ஆண்டுகளில் வடக்கு பகுதி அரைப்பாலைவனமாக மாறக்கூடும். அதை சமாளிப்பதற்குரிய வழி முறைகள் பற்றியும் ஆராய வேண்டுமெனத் தெரிவித்துள்ளாா்.


  • Blogger Comments
  • Facebook Comments

  0 comments:

  Item Reviewed: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பிக்களை அரசுடன் இணையுமாறு - சம்பிக்க! Rating: 5 Reviewed By: tamil2017
  Scroll to Top