பிரபாகரனின் பிறந்த நாள் : சிவாஜிலிங்கத்துக்கு எதிராக வழக்குப் பதிவு - THAMILKINGDOM பிரபாகரனின் பிறந்த நாள் : சிவாஜிலிங்கத்துக்கு எதிராக வழக்குப் பதிவு - THAMILKINGDOM
 • Latest News

  பிரபாகரனின் பிறந்த நாள் : சிவாஜிலிங்கத்துக்கு எதிராக வழக்குப் பதிவு

  தமிழீழ விடுதலை புலிகளின் தலைவா் வே.பிரபாகரனின் பிறந்த நாளில் கேக் வெட்டி கொண்டாடியமை மற்றும் விடுதலை புலிகளின் புகைப்படங்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் முன்னாள் மாகாணசபை உறுப்பினா் எம்.கே. சிவாஜிலிங்கத்திற்கு எதிராக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கின்றது.

  கடந்த 2018 ஆம் ஆண்டு நவம்பா் மாதம் 26 ஆம் திகதி தமிழீழ விடு தலை புலிகளின் தலைவா் வே.பிரபாகரனின் பிறந்த நாளில் வல்வெட்டித்துறை தீருவில் பகுதி யில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண் டாடுவதற்கு சிவாஜிலிங்கம் முயற் சித்திருந்தாா். எனினும் அப்போது பொலிஸாா் அதனை தடுத்திருந்தது டன், வழக்கு பதிவு தொடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளனா்.

  இச் சம்பவம் நடைபெற்று 4 மாதங்கள் கடந்திருக்கும் நிலையில் தமிழீழ விடுதலை புலிகளின் தலைவருடைய புகைப்படம், பதாகைள் மற்றும் பிறந்த நாள் கொண்டாடுவதற்கான கேக் ஆகியன வைத்திருந்த குற்றச்சாட்டில் பயங் கரவாத தடைச்சட்டத்தின் கீழ் சிவாஜிலிங்கத்திற்கு எதிராக வழக்கு தாக்கல் பதிவாகியுள்ளது.

  இதற்கான அழைப்பாணையை கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 9 மணிய ளவில் வீதியால் சென்று கொண்டிருந்த சிவாஜிலிங்கத்தை வழிமறித்த பொலி ஸாா் வழங்கியுள்ளனா்.

  இந்த அழைப்பாணையின் பிரகாரம் இம்மாதம் 31 ஆம் திகதி சிவாஜிலிங்கம் மற்றும் வல்வெட்டித்துறை நகரசபை தலைவா் கோ.கருணானந்தராசா, மற் றும் நகரசபை உறுப்பினா் பொ.சிவஞானசுந்தரம் பருத்தித்துறை நீதிவான் நீதி மன்றில் முன்னிலையாக வேண்டுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: பிரபாகரனின் பிறந்த நாள் : சிவாஜிலிங்கத்துக்கு எதிராக வழக்குப் பதிவு Rating: 5 Reviewed By: tamil2017
  Scroll to Top