மாணவா்களின் கல்வி நடவடிக்கையை முன்னெடுக்குமாறு அமைச்சு கோரிக்கை.! - THAMILKINGDOM மாணவா்களின் கல்வி நடவடிக்கையை முன்னெடுக்குமாறு அமைச்சு கோரிக்கை.! - THAMILKINGDOM
 • Latest News

  மாணவா்களின் கல்வி நடவடிக்கையை முன்னெடுக்குமாறு அமைச்சு கோரிக்கை.!

  மாணவர்களின் வருகையை கவனத்தில் கொள்ளாது கல்வி நடவடிக்கை களை முன்னெடுக்குமாறு கல்வி அமைச்சு, அனைத்து ஆசிரியர்களுக்கும் தெரிவித்துள்ளது. 

  இந்த நிலையில், பாடசாலைகளில் பாது காப்பு நடவடிக்கைகள் உறுதிப்படுத்தப்பட் டுள்ள போதிலும் மாணவர்களின் வருகை யில் காணப்படும் குறைபாடு காரணமாக பாடத்திட்டங்களை பூர்த்திசெய்வதில் சிக் கல் ஏற்பட்டுள்ளதாக, கல்வி அமைச்சின் செயலாளர் நிஹால் ரணசிங்க தெரிவித் துள்ளார்.

  இந்த சூழ்நிலையை கருத்தில்கொண்டு பாடசாலைக்கு சமூகமளிக்கும் மாண வர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் உரிய முறையில் முன்னெடுக்கப்பட வேண்டும் என, கல்வி அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

  இதேவேளை, பாடசாலைகளில் மாணவர்களின் வருகையைக் குறைக்கும் வகையிலான போலிப் பிரசாரங்கள் மேற்கொண்டமை தொடர்பிலும் பதிவாகி யுள்ளாதாக, கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

  இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் தொடர்பில் தராதரம் பாராது நடவடிக்கை எடுக்கப்படுமென அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது. 

  • Blogger Comments
  • Facebook Comments

  0 comments:

  Item Reviewed: மாணவா்களின் கல்வி நடவடிக்கையை முன்னெடுக்குமாறு அமைச்சு கோரிக்கை.! Rating: 5 Reviewed By: tamil2017
  Scroll to Top