வாகன விபத்தில் இருவர் உயிரிழப்பு.! - THAMILKINGDOM வாகன விபத்தில் இருவர் உயிரிழப்பு.! - THAMILKINGDOM
 • Latest News

  வாகன விபத்தில் இருவர் உயிரிழப்பு.!

  பொல்காவலை மற்றும் களுவாஞ்சிக்குடி பகுதிகளில் நேற்று நடைபெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனா். 

  பொல்காவலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கொழும்பு – குருணாகலை பிரதான வீதியில் குருணாகலை நோக்கிச் சென்ற கெப்ரக வாகனம் எதிர்த் திசையில் வந்த முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளா னதில் பலத்த காயங்களுக்குள்ளான முச்சக்கர வண்டி சாரதியும் அதில் பயணித்தவரும் குருணாகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் னர் சாரதி உயிரிழந் துள்ளாா்.

  அவர் கஹபத்வல - மாவத்தகம பகுதியை சேர்ந்த 19 வயதுடையவர் ஆவார். மேலும், களுவாஞ்சிக்குடியில் இடம்பெற்ற விபத்தில் 42 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார்;

  களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்முனை – மட்டக்களப்பு பிர தான வீதியில் கல்முனை நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப் பாட்டை இழந்தமையால் இவ் விபத்து ஏற்பட்டுள்ளது.

  பலத்த காயங்களுக்குள்ளான மோட்டார் சைக்கில் ஒட்டுனர் களுவாஞ்சிகுடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார். அவர் களுதா வளை பகுதியை சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: வாகன விபத்தில் இருவர் உயிரிழப்பு.! Rating: 5 Reviewed By: tamil2017
  Scroll to Top