Breaking News

முஸ்லிம்களை கூண்­டோடு வேட்­டை­யாடும் பேரி­ன­வாதிகளுக்கு கடிவாளம் தேவை - வேலுகுமார்

முஸ்லிம் சமூ­கத்தை கூண்­டோடு வேட்­டை­யாடத் துடிக்கும் பேரின­வாத சக்­தி­க­ளுக்கு அர­சாங்கம் உட­ன­டி­யாக கடி­வாளம் போட வேண்டும். அவ்­வாறு இல்­லா­விட்டால் இந்­நாடு மீண்டும் அதலபாதா­ளத்தை நோக்­கியே பய­ணிக்கும் நிலை உரு­வாகும்.

சில சம்­ப­வங்­களைப் பார்க்­கும்­போது நாட்டை ஆள்­வது அர­சி­யல்­வா­தி­களா அல்­லது பேரி­ன­வா­தி­களா என்ற சந்­தேகம் எழு­கின்­றது என்று ஜன­நா­யக மக்கள் முன்­ன­ணியின் பிரதித் தலை­வரும் கண்­டி­மா­வட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான வேலு­குமார் தெரி­வித்­துள்ளார்.

முஸ்லிம் அர­சி­யல்­வா­திகள் கூட்­டாக பதவி வில­கி­யமை தொடர்பில் வேலு­குமார் எம்.பி.யால் விடுக்­கப்­பட்­டுள்ள அறிக்­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

 மேலும் கூறப்­பட்­டுள்­ள­தா­வது,

நாட்டின் நல­னையும், சமூ­கத்தின் பாது­காப்­பையும் கருத்­திற்­கொண்டு முஸ் லிம் அர­சி­யல்­வா­தி­களால் எடுக்­கப்­பட்­டுள்ள முடிவை இந்­நாட்­டி­லுள்ள பெரும்­பா­லான மக்கள் வர­வேற்­றுள்­ளனர். இப்­பி­ரச்­சி­னையை பெரி­து­ப­டுத்தி முஸ்லிம் அர­சி­யல்­வா­தி­க­ளாலும் அர­சியல் கண்­காட்­சி­களை நடத்­தி­யி­ருக்க முடியும்.

அவ்­வாறு செய்­தி­ருந்தால் இந்­நாட்டில் இரத்த ஆறு ஓடி­யி­ருக்கும். எனவே முஸ்லிம் அர­சியல்வாதி­களின் இந்த விட்­டுக்­கொ­டுப்பை எவரும் பல­வீ­ன­மாக கரு­தக்­கூ­டாது. நாட்டில் தற்­போது நடை­பெறும் சில சம்­ப­வங்­களைப் பார்க்­கும்­போது நாட்டை ஆள்­வது அர­சி­யல்­வா­தி­களா அல்­லது பேரி­ன­வா­தி­களா என்ற சந்­தேகம் எழு­கின்­றது.

அது­மட்­டு­மல்ல நாட்­டுக்­கென அர­ச­மைப்பு மற்றும் சட்டம் இருக்­கையில், எதற்­காக அழுத்­தங்­க­ளுக்கு பணியும் வகையில் தீர்­மா­னங்கள் எடுக்­கப்­ப­டு­கின்­றன? முஸ்லிம் சமூ­கத்தின் மத்­தி­யிலும் அடிப்­ப­டை­வா­திகள் இருக்­கலாம். அவ்­வா­றா­ன­வர்­களை அடை­யா­ளம்­கண்டு தனி­யாக களை­யெ­டுக்­க­ முடியும். மாறாக ஒரு சில­ருக்­காக ஒட்­டு­மொத்த சமூகத்­தையும் வதைக்க முயன்றால் அது பாத­க­மான எதிர்விளைவுக­ளையே ஏற்­ப­டுத்தும்.

அதே­வேளை, முஸ்­லிம்­க­ளைத்­தானே சீண்­டு­கின்­றனர். நமக்கு எவ்­வித பிரச்­சி­னையும் இல்­லையே என சிறு­பான்மை இனத்­தி­லுள்ள சிலர் கருத்­து­க்களை முன்­வைக்­கின்­றனர். அது தவ­றாகும்.இன்று முஸ்லிம் சமூ­கத்தின் கழுத்தில் வைக்­கப்­பட்­டுள்ள பேரி­ன­வாதம் என்ற கத்தி நாளை தமி­ழர்­களின் கழுத்­திலும் வைக்­கப்­ப­டலாம்.

எனவே, பேரி­ன­வா­தி­களின் பிரித்­தாளும் சூழ்ச்­சியை முறி­ய­டித்து, தம்மை பாது­காத்துக் கொள்­வ­தற்­காக சிறுபான்­மை­யின மக்கள் ஓரணியில் திரள வேண்டும். அதேபோல், பேரினவாதிகளை அரசாங்கம் கட்டுப்படுத்த வேண் டும்.

அவர்கள் மீது கைவைத்தால் நாட்டில் பிரச்சினை தலைதூக்கும் என நினைத்து அரசாங்கம் மௌனம் காக்குமானால், நாட்டுக்கு வளமானதொரு எதிர்காலம் இல்லை என்றே கூறவேண்டுமெனத் தெரிவித்துள்ளாா்.