Breaking News

மனோ கணேசனிற்கு நன்றிகள் - விக்கினேஸ்வரன்

திரு­கோ­ண­மலை மாவட்ட கன்­னியா வெந்நீர் ஊற்று பிள்­ளையார், முல்­லைத்­தீவு மாவட்ட நீரா­வி­யடி பிள்­ளையார் ஆலய விவ­கா­ரங்­களில் தலை­யிட்­ட­மைக்கு எனது நன்­றி­களை தெரி­வித்­துக்­கொள்­கின்றேன்.

எனது நண்­பரும், ஜனா­தி­பதி சட்­டத்­த­ர­ணி­யு­மான கனக ஈஸ்­வரன் இவ்­வி­வ­கா­ரங்கள் தொடர்பில் வழக்கு தொடர்ந்து சட்ட நட­வ­டிக்­கை­க­ளிலும் ஈடு­பட உள்­ள­தாக எனக்கு தெரி­வித்­துள்ளார். அர­சியல் நட­வ­டிக்­கை­க­ளுக்கு மேல­தி­க­மாக, இந்த வழக்­குக்கு சத்­திய வாக்­கு­மூலம் தர நீங்கள் தயா­ராக இருப்­ப­தா­கவும், அவர் மூலம் நான் அறிந்தேன்.

இதற்­காக மீண்டும் என் நன்­றியை தெரி­வித்­துக்­கொள்­கிறேன் என்று முன்னாள் வட­மா­காண சபை முதல்­வரும், தமிழ் மக்கள் கூட்­டணி செய­லா­ள­ரு­மான சி.வி.விக்­னேஸ்­வரன், தமிழ் முற்­போக்கு கூட்­டணி தலை­வரும், தேசிய ஒரு­மைப்­பாடு, அர­ச­க­ரும மொழிகள், சமூக மேம்­பாடு, இந்து சமய அலு­வல்கள் அமைச்­ச­ரு­மான மனோ கணே­ச­னுக்கு எழு­தி­யுள்ள கடி­தத்தில் விவரித்துள் ளாா்.

இது­பற்றி அமைச்சர் மனோ கணே­ச­னிடம் வின­வி­ய­போது, விக்­னேஸ்­வரன் இது­பற்றி தன்­னிடம் நேர­டி­யாக உரை­யா­டி­ய­தா­கவும் மேலும் திரு­கோ­ண­மலை மாவட்ட கன்­னியா வெந்நீர் ஊற்று பிள்­ளையார், முல்­லைத்­தீவு மாவட்ட நீரா­வி­யடி பிள்­ளையார் ஆலய விவ­கா­ரங்கள் இன்­னமும் முழு­மை­யான முடி­வு­களை எட்­ட­வில்லை.

தொல்­பொருள் திணைக்­க­ளத்­தி­ட­மி­ருந்து சில ஆவ­ணங்­களை தான் கோரி இருப்­ப­தா­கவும் அவை இவ்­வாரம் தனக்கு கிடைக்கும் என்றும், அதை­ய­டுத்து அடுத்த கட்ட நட­வ­டிக்­கை­களை தான் முன்னெடுக்க உள்ளதாகவும், இக் கோவில்களை மீளக்கட்டுவிக்க தனது அமைச்சு தயாராக உள்ளதாகவும் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளாா்.