Breaking News

ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்கு வந்தால் சிறப்பு - விஜயகலா மகேஸ்வரன்

வடமாகாணத்திலே கடந்தகால அரசாங்கத்தினால் இந்து ஆலயங்கள் தொடக் கம் பாடசாலைகள் வரைக்கும் இடித்து ஒழித்து அழிக்கப்பட்ட வரலாறு கடந்த கால அரசாங்கத்திற்குள்ளது என்பது எல்லோரும் அறிந்த உண்மை.

இன்று அந்த நிலையை மாற்றி அந்த ஆல யங்களை இனங்கண்டு புனருத்தாரணம் செய்வதற்கான நிதியினை எங்களுடைய ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம் வழங்கி வருகின்றதாக கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரி வித்துள்ளாா். 

வடமாகாணத்திலே கடந்தகால அரசாங்கத்தினால் இந்து ஆலயங்கள் தொடக் கம் பாடசாலைகள் வரைக்கும் இடித்து ஒழித்து அழிக்கப்பட்ட வரலாறு கடந்த கால அரசாங்கத்திற்குள்ளது என்பது எல்லோரும் அறிந்த உண்மை.

இன்று அந்த நிலையை மாற்றி அந்த ஆலயங்களை இனங்கண்டு புனருத் தாரணம் செய்வதற்கான நிதியினை எங்களுடைய ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம் வழங்கி வருகின்றது. என கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளாா்.

தேசிய ஒருமைப்பாடு, அரசு கரும் மொழிகள், சமூக மேம்பாடு இந்து சமய விவகார அலுவல்கள் அமைச்சின் ஏற்பாட்டில், இந்து ஆலயங்களை வலுப் படுத்தும்" தெய்வீக சேவைத் திட்டம்" இன்று ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பா ணத்தில் அமைந்துள்ள இலங்கை வேந்தன் கலைக்கல்லூரியில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மேலும் தெரிவிக்கையில்,

தேசிய ஒருமைப்பாடு அரச கருமமொழிகள் சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய விவகார அமைச்சின் ஊடாக அமைச்சர் மனோகணேசன் தெய்வீக சேவைத்திட்டம் என்ற பொருளின் ஊடாக நடாளாவிய ரீதியில் இருக்கின்ற இந்து ஆலயங்களுக்கான நிதிகளை அந்தந்த மாகாணங்களுக்கு நேரடியாகச் சென்று நிதிகளை ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தின் ஊடாக வழங்கி வருகின்றார்.

கடந்த கால ஆட்சியாளர்ளினால் இந்த ஆலயங்கள் தொடக்கம் பாடசாலைகள் வரைக்கும் எங்களுடைய வடமாகாணத்திலே இடித்து ஒழித்து அழிக்கப்பட்ட வரலாறு கடந்த கால அரசாங்கத்திற்கு உள்ளது என்பது எல்லோரும் அறிந்த உண்மை.

இன்று அந்த நிலையை மாற்றி எங்களுடைய ஐக்கியதேசிய முன்னணி அரசாங்கம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வழிகாட்டலில் நேரடியாக அமைச்ர் மனோ கணேசன் இந்த ஆலயங்களை இனங்கண்டு அவற்றுக்கான நிதிகளை வழங்கி வருகின்றார்.

ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம் இருந்தாலும் பரவாயில்லை. எங்களு டைய வலிவடக்கு பிரதேசத்திலலே பலாலிக்கு உட்பட்ட பிரதேசத்திலே இன்னும் எத்தனையோ ஆலயங்கள் மூடப்பட்ட நிலையில் இராணுவக் கட்டுப் பாட்டில் இருக்கின்றன. ஆலயங்களுக்கு ஒளியீட்டப்பட்டாத நிலையில் இன் னும் எத்தனையோ ஆலயங்கள் காணப்படுகின்றன.

இது ஒரு மனவருத்தத்துக்கு உரியநிலை. இன்று ஆட்சிகள் பரவலாக மாற்ற மடைந்து கடந்த வருடம் ஒக்டோபர் மாத்திலே நாங்கள் கடந்த கால அரசாங் கத்தை இன்று இருக்கின்ற மேன்மை தங்கிய ஜனாதிபதி மைத்திபால சிறிசேன மாற்றி அவர்களுடைய கைகளிலே கொடுத்து இந்த அரசாங்கத்தை விரட்டி வீட்டிற்கு அனுப்புவதற்காக நாங்கள் 52 நாட்கள் அதாவது கொழும்பு மாவட் டத்தில் போராட்டம் நடத்தினோம்.

அவ்வாறு போராடித்தான் இந்த ஆட்சியை அமைத்தோம். அன்றும் .ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியில் இருந்தது. இன்றும் ஐக்கிய தேசிய முன்னணி ஆட்சி யில் இருக்கின்றது.

இதற்கு முதுகெலும்பாக இருக்கின்றவர் ரணில் விக்கிரமசிங்க எத்தினை பிரச் சினை வந்தாலும் இனவாதம் தலை தூக்கினாலும் தன்னுடைய ஆட்சி யில் எத்தனை அநீதிகள், இனவாதம் தலை தூக்கினாலும் அவர் அதனை முறிய டித்து தன்னுடைய கையிலே கொண்டு வந்திருக்கின்றார்.

அதற்காக அந்த மதங்களை இழிவு படுத்தக்கூடாது. கடந்த காலங்களில் பள்ளி வசால்கள், தேவலயங்கள், ஆலயங்கள் அடித்து ஒழிக்க்பபட்ட வரலாறுகள் நடைபெற்றன. அப்படியான சம்பங்கள் இப்போதுள்ள ரணில் அரசாங்கத்தில் இல்லை. இருந்த போதிலும் சில அநீதிகள் நடைபெற்றுள்ளன.

மேலும் ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம் ஆட்சிக்கு வந்தன் பின்னர் குறுகிய காலத்திலே நாங்கள் நிறைய வேலைகளை அபிவிருத்தியில் செய்து கொடுத்திருக்கின்றோம். கடந்த 4 வருடங்களுக்கும் மேலாக இந்த ஆலயங்க ளுக்கு நிதிகள் வழங்கப்படாத நிலை நல்லாட்சி அரசாங்கத்தில் இருந்தன.

இரண்டுபெரிய கட்சிகள் இணைந்து ஆட்சி அமைத்ததன் காரணத்தினால் தான் இப்படியான ஒரு நிலைக்கு தள்ளப்பட்டோம். எதிர்வரும் காலங்களில் கிட்டத் தட்ட இரண்டு மூன்று மாதங்களில் எங்களுடைய இந்த ஆட்சியின் ஊடாக ஜனாதிபதித் தேர்தலை சந்திக்க உள்ளோம்.

ஜனாதிபதி தேர்தலிலே ஒரு கட்சி போட்டியிட வேண்டும். ஒரு கட்சி போட்டி யிட்டு ஒரு கட்சியின் ஊடாக ஒருதலைவர் நியமிக்கப்பட வேண்டும். ஒரு நிர் வாகம் வந்தால்தான் எங்களுடைய அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்க்க முடியும்.

ஆகையால் இன்று ஐக்கிய தேசிய முன்னணி ஆட்சிக்கு வந்து இன்று சிறு பான்மை இன மக்களை மதித்து அவர்களை ஒன்று கூட்டி ஒற்றுமையாக இருந்தால் தான் இந்த நிகழ்ச்சியை நடத்தக் கூடியதாக உள்ளது. நாங்கள் இன்று ஆலயங்களுக்கான நிதியை தர்மகர்த்தாக்கள் பெறுவதற்கான நிலை யும் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்கு வரும். ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்குவந்தால் தான் நிம்மதியான வாழ்வு, அரசியல் தீர்வு நிரந்தர அபிவிருத்தி வேலை வாய்ப்பு என்பற்றை பெற முடியுமெனத் தெரி வித்துள்ளாா்.