Breaking News

கன்னியாவில் தமிழர்கள் மீது தாக்குதல் நடாத்தியதை ஏற்க முடியாது - மஸ்தான்

கன்னியாவில் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை ஏற்றுக்கொள்ள முடியாதென மஸ்தான் எ.ம் பி. தெரிவித்துள்ளார்.

அண்மையில் பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட அரசிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் இப்பிரச்சினைனை கையிலெடுத்து இதற்கு ஒரு முடிவினைப் பெற்று விட்டு அரசிற்கு ஆதரவாக வாக்களித் திருக்கலாம்.

இவ்வாறு வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கே. காதர் மஸ்தான் அவ ரது அலவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது தெரிவித்துள்ளார். இந்த நாட்டில் நடைபெற்ற சில சம்பவங்களை ஏற்றுக்கொள்ள முடியாது.

நாட்டில் சட்டம் சரியாக செயற்படுகின்றதா என்பதில் சில கேள்விக் குறிகள் காணப்படுகின்றன. அவ்வாறான ஒரு சம்பவங்கள் நடைபெறும்போது சிலர் சட் டங்களை தமது கைகளில் எடுத்துக் கொள்கின்றார்கள்.

சிலர் தமது உரிமைகளை வென்றெடுக்க ஏதோ ஒரு வகையில் ஆர்ப்பாட்டங் களை மேற்கொள்கின்றார்கள். அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்றவர்கள் இன்று இந்த அரசாங்கம் எவ்வாறு செயற்படுகின்றது.

என்பதை அறிந்து செயற்படுவதுடன் அண்மையில் கொண்டுவரப்பட்ட நம் பிக்கையில்லாப் பிரேரனையில் இப்பிரச்சிளைகளை கையில் எடுத்து இதற்கு ஒரு முடிவைப் பெற்று விட்டு ஆதரவாக வாக்களித்திருக்கலாமென்பது தான் என்னிடைய நிலைப்பாடு எனத் தெரிவித்துள்ளார்.