மரண தண்டனை விடயத்தில் சஜித் பிரேமதாச கருத்து.! - THAMILKINGDOM மரண தண்டனை விடயத்தில் சஜித் பிரேமதாச கருத்து.! - THAMILKINGDOM
 • Latest News

  மரண தண்டனை விடயத்தில் சஜித் பிரேமதாச கருத்து.!

  மரண தண்டனையை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர், அமைச்சர் சஜித் பிரேமதாச கெக்கிராவையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கருத்துரைத்துள்ளாா். 

  மேலும் தெரிவிக்கையில்......,
    சிறைச்சாலைகளில் இருந்தே போதைப்பொருள் கடத்தல்கள் வழிநடத்தப்படுகின்றன. நவீன தொழில்நுட்ப உபகரணங்களை பயன்படுத்தி போதைப்பொருள் கடத்தல் நடைபெறுகின்றது.

  உண்மையில் சாட்சியங்களுடன் இவை நீதிமன்றத்தில் உறுதிப்படுத்தப்பட்டி ருந்தால், அவர்களுக்கு மரண தண்டனை வழங்குவதில் எவ்வித தவறும் இல்லை என்பதே எனது நிலைப்பாடு.

  மரண தண்டனைக்கு எதிராக பேசுவோரிடம் நான் ஒரு விடயத்தை கேட்கின் றேன். போதைப்பொருள் கடத்தல் காரணமாக நாட்டில் பாதிக்கப்படும் 45 இலட் சம் பாடசாலை மாணவர்களை பாதுகாப்பதற்காக என்ன செய்ய போகின் றீர்கள்?

  ஆகவே, போதைப்பொருள் கடத்தல்காரர்கள் தொடர்பில் நாம் தீர்மானம் எடு க்க வேண்டும். மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள போதைப்பொருள் கடத் தல்காரர்கள் தொடர்பில் சிந்திக்க வேண்டாம். தயவு செய்து 45 இலட்சம் பாடசாலை மாணவர்கள் தொடர்பில் சிந்தியுங்கள்.

  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: மரண தண்டனை விடயத்தில் சஜித் பிரேமதாச கருத்து.! Rating: 5 Reviewed By: Thamil
  Scroll to Top