Breaking News

பாராளுமன்றில் உணவு, மின்சார செலவு விபரத்தின் மதிப்பீடு தெரியுமா?

வருடம் ஒன்றுக்கு பாராளுமன்றத்தில் உணவு மற்றும் குடிபான வகைகளுக் காக 120 மில்லியன் ரூபா செலவிடப்படுவதாக பாராளுமன்ற நிதி அதிகாரிகள் குழுவினர் பகுப்பாய்வு செய்துள்ளனா். 

பாராளுமன்ற உறுப்பினர்கள், பாரா ளுமன்ற ஊழியர்கள் மற்றும் பாராளு மன்றத்திற்கு வருகை தரும் விருந்தி னர்கள் உணவு மற்றும் பானங்களை உட்கொள்கின்றனர், இதில் 75 சதவீத உணவுச் செலவு பாராளுமன்ற ஊழி யர்களுக்கான செலவாக மதிப்பிடப் பட்டுள்ளது.

பாராளுமன்றத்தில் உணவுகள் வீண் விரயமாவதை தடுப்பதற்காக பாராளு மன்ற சிற்றுண்டிச்சாலை ஊழியர்கள் உணவு வகைகள் தயாரிப்பதை கணிச மாக குறைக்க வேண்டும் எனவும் பாராளுமன்றத்திற்கு சமூகமளிப்ப வர்க ளின் விபரங்களை பெற்றுக் கொண்டதன் பின்னர் அதற்கேற்றால் போல் உணவு தயாரிக்க வேண்டும் எனவும் சபாநாயகர் கரு ஜெயசூரிய ஆலோசனை வழங்கியுள்ளார்.

இதேவேளை பாராளுமன்றத்தில் ஆண்டொன்றுக்கு மின்சாரத்துக்கு 80 மில்லி யன் ரூபாவும், தொலைபேசி பாவனைகளுக்கு 14.5 மில்லின் ரூபாவும், குடி நீருக்காக 9 மில்லியன் ரூபாவும் செலவிடப்படுவதாக பாராளுமன்ற நிதி பிரி வுக்கான பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், மின்சார செலவுகளில் பெரும்பகுதி குளிரூட்டிக்காக (air-conditioning system) செலவு செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.