Breaking News

ஆகஸ்ட் 5 கூட்டணி நிச்சயமாக மஹிந்த அணியை கவிழ்க்கும்.!

ஆகஸ்ட் 5 ஆம் திகதி ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையில் உருவாகும் புதிய கூட்டணி நிச்சயமாக மஹிந்த அணியை வீழ்த்தும் எனத் தெரிவித்த கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம், ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப் பட்டவுடன் கூட்டணியில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முக்கிய அணி யொன்று கைகோர்க்கும் எனத் தெரிவித்துள்ளாா். 

பிரதான இரண்டு கட்சிகளும் அடுத்த மாதம் தமது கூட்டணிகளை அமை த்து ஜனாதிபதி தேர்தலுக்கான அடு த்த கட்ட பிரதான நகர்வுகளை முன் னெடுக்கவுள்ள நிலையில் ஐக்கிய தேசிய கட்சியின் கூட்டணி குறித்தும் தமிழர் தரப்பின் ஆதரவை நோக்கிய ஐக்கிய தேசிய கட்சியின் செயற்பாடுகள் குறித்தும் வினாவியபோது தெரிவித் துள்ளதுடன், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஆதரவை எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளாா்.