Breaking News

இலங்கையில் ஆட்சி மாற்றமொன்றினை ஏற்படுத்த அமெரிக்கா நிதி வழங்கியதா.?

இலங்கையில் ஆட்சிமாற்றமொன்றினை ஏற்படுத்துவதற்காக அமெரிக்க நிதி வழங்கவில்லை என தெரிவித்துள்ள இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்பிளிட்ஸ் ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் ஆட்சியில் நீடிப் பதை உறுதி செய்யும் முயற்சிகளில் அமெரிக்கா ஈடுபடவுமில்லையெனத் தெரிவித்துள்ளார்.

இலங்கை மக்களே 2015 இல் புதிய அர சாங்கத்தை தெரிவு செய்தனர் இன் னும் சில மாதங்களில் அவர்களே புதிய அரசாங்கத்தை தெரிவு செய் வார்கள் எனவும் அவர் தெரிவித்துள் ளார். முகநூல் உரையாடலில் இவ்வாறு தெரிவித்துள்ளாா்.

 மக்களின் விருப்பத்திற்கு அமெரிக்காவின் ஆதரவுள்ளது என தெரிவித்துள்ள அவர் மக்கள் தெரிவு செய்யும் எந்த அரசாங்கத்துடனும் அமெரிக்கா இணைந்து செயற்படுவதாகத் தெரிவித்துள்ளாா்.

இலங்கையுடன் சோபா உடன்படிக்கை குறித்து அமெரிக்கா பேச்சு வார்த்தை களை மேற்கொள்வதற்கு சீனா ஒரு காரணமல்ல என அமெரிக்கத் தூதுவர் தெரிவித்துள்ளார்.

வலுவான சுதந்திரமான இறைமையுள்ள இலங்கையை அமெரிக்கா ஆதரிக் கின்றது என குறிப்பிட்டுள்ள அவர் இந்தோ பசுபிக்கின் பாதுகாப்பிற்கான இலங் கையின் பங்களிப்பை வரவேற்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்தோ பசுபிக்கின் பாதுகாப்பை உறுதிசெய்வதில் இலங்கை மேலும் வலுவா னதாக விளங்குவதை உறுதி செய்வதற்காகவே இலங்கையுடன் ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.