தேசிய பாடசாலை ஆசிரியர்கள் தமது பிள்ளைகளை அதே பாடசாலையில் இணைக்க வாய்ப்பு.! - THAMILKINGDOM தேசிய பாடசாலை ஆசிரியர்கள் தமது பிள்ளைகளை அதே பாடசாலையில் இணைக்க வாய்ப்பு.! - THAMILKINGDOM
 • Latest News

  தேசிய பாடசாலை ஆசிரியர்கள் தமது பிள்ளைகளை அதே பாடசாலையில் இணைக்க வாய்ப்பு.!

  தேசிய பாடசாலைகளில் 3 வருடங்களுக்கும் மேலான சேவையைப் பூர்த்தி செய்த ஆசிரியர்கள், அவர்கள் கல்வி கற்பிக்கும் பாடசாலைகளில் தமது பிள் ளைகளை இணைப்பதற்கான சந்தர்ப்பத்தை வழங்குவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

  இதற்கான நடவடிக்கைகளை உடனடி யாக எடுக்குமாறு, உரிய அதிகாரிக ளுக்கு கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் அறிவுறுத்தியுள்ளார்.

  பாடசாலைகளில் ஆயிரக்கணக்கான மாணவர்களை வழிநடத்தும் ஆசிரி யர்கள், தமது பிள்ளைகளை அவர்கள் கல்வி கற்பிக்கும் பாடசாலைகளில் சேர்ப்பதை இலகுவாக்குவதற்காக அமைச்சர் இத் தீர்மானத்தை எடுத்துள்ள தாக, அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவாகியுள்ளது.

  இதன்படி, தேசிய பாடசாலைகளில் தரம் 1, 5, 6 மற்றும் தரம் 11 தவிர்ந்த ஏனைய தரங்களில் மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளது. இதன்மூலம் ஆசிரியர்களின் கற்பித்தல் நடவடிக்கை களைத் திறம்பட செயற்படுவதற்கு வாய்ப்புக் கிட்டும் என, கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: தேசிய பாடசாலை ஆசிரியர்கள் தமது பிள்ளைகளை அதே பாடசாலையில் இணைக்க வாய்ப்பு.! Rating: 5 Reviewed By: Thamil
  Scroll to Top