Breaking News

முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் பிரதமர் தெரிவித்தது என்ன ?

முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் தங்­க­ளது முன்­னைய அமைச்சுப் பத­வி­களை நாளைய தினம் (இன்று) பொறுப்­பேற்க வேண்டும்.

அதற்­கான சிபா­ரிசு கடி­தங்­களை ஜனா­தி­ப­திக்கு ஏற்­க­னவே அனுப்பி வைத்­துள்ளேன் என பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளிடம் நேற்­றைய சந்­திப்­பின்­போது கேட்­டுக்­கொண்ட போதிலும் முஸ்லிம் எம்.பி. க்கள் அமைச்சுப் பொறுப்­பு­களை மீண்டும் பொறுப்­பேற்­பதை நிரா­க­ரித்­துள்ளாா்கள்.

முஸ்லிம் சமூ­கத்தின் பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு வழங்­கப்­ப­டும்­வரை தங்­களால் அமைச்சுப் பொறுப்­பு­களை மீண்டும் பொறுப்­பேற்க முடி­யாது என்று உறு­தி­யாகத் தெரி­வித்­தார்கள். இதன்­போது முஸ்லிம் மக்­களின் பிரச்­சி­னை­களை ஒரு­வா­ரத்தில் தீர்ப்பேன் என்று பிர­தமர் உறு­தி­ய­ளித்­துள்ளாா்.

நேற்று மாலை பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வு­ட­னான முஸ்லிம் எம்.பி. க்க ளின் சந்­திப்பு அலரி மாளி­கையில் இடம்­பெற்­றது. இச்­சந்­திப்பில் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான ரவூப் ஹக்கீம், ரிசாத் பதி­யுதீன், எச்.எம்.எம்.ஹரீஸ், பைசல் காசிம், அலி­சாஹிர் மௌலானா, எ.எல்.நசீர், அப்­துல்லாஹ் மஹ்ரூப், எம்.எஸ்.தௌபீக் ஆகியோர் கலந்து சிறப்பித்துள்ளனா்.

நேற்று மாலை 3.30 மணி­ய­ளவில் நடைபெற்ற இச் சந்­திப்பில் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் அங்கு சென்­றதும் கலந்­து­ரை­யாடல் ஆரம்­பிக்­கப்­ப­டு­வ­தற்கு முன்பே பிர­தமர் மீண்டும் அமைச்சுப் பொறுப்­பு­களை ஏற்­றுக்­கொள்­ளுங்கள்.

அதற்­கான ஏற்­பா­டு­களைச் செய்து விட்டேன் என்று தெரி­வித்தார். அதற்கு மறுப்புத் தெரி­வித்த முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் தங்கள் பக்க நியா­யங்­களை விலக்­கி­னார்கள். ஏப்ரல் தற்­கொலை குண்டுத் தாக்­கு­தல்­க­ளை­ய­டுத்து அநா­வ­சிய கைதுகள் நடை­பெற்­றுள்­ளன.

கட்­ட­விழ்த்து விடப்­பட்ட வன்­செ­யல்­க­ளினால் பாதிக்­கப்­பட்ட சொத்­து­க­ளுக்கு நஷ்­ட­ஈ­டுகள் வழங்­கப்­ப­ட­வில்லை. கிழக்கில் தீர்க்­கப்­பட வேண்­டிய பிரச்­சி­னை கள் பெரும் எண்­ணிக்­கை­யி­லுள்­ளன.

கல்­முனை, வாழைச்­சேனை, தோப்பூர் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு வழங்­கப்­ப­ட­வில்லை. இவ்­வா­றான நிலையில் எம்மால் அமைச்சுப் பொறுப்­பு­களை மீளப்­பெ­ற­மு­டி­யாது. இந்தத் தீர்­மா­னத்தை நாம் எமது அர­சியல் உயர்­பீட கூட்­டத்தில் தீர்­மா­னித்­தி­ருக்­கின்றோம் என பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ரவூப் ஹக்கீம் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விடம் தெரி­வித்துள்ளாா்.

கல்­முனை தமிழ் பிர­தேச செய­லக விவ­காரம் தொடர்பில் தங்­க­ளுக்கு வழங்­கப்­பட்ட வாக்­கு­று­திகள் மீறப்­பட்­டுள்­ளன. அவ்­வி­வ­காரம் தொடர்ந்தும் இழுத்­த­டிக்­கப்­பட்டு வரு­கி­றது. இந்­நி­லையில் அமைச்சுப் பத­வி­களை ஏற்­பது தொடர் பில் நாம் உடன்­ப­ட­வில்லை எனவும் முஸ்லிம் எம்.பி. க்கள் தெரி­வித்­தார்கள்.

ஒரு வாரத்தில் தீர்வு இதே­வேளை கல்­முனை உப பிர­தேச செய­லக விவ­காரம் தொடர்பில் தீர்­மானம் மேற்­கொள்­வ­தற்கு அமைச்சர் வஜிர அபே­வர்­தன தலை­மையில் குழு­வொன்று நிய­மிக்­கப்­பட்­டுள்­ளது. தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு மற்றும் முஸ்லிம் தரப்பு தங்கள் பக்க நியா­யங்­களை முன்­வைத்­துள்­ளன.

இது தொடர்­பான தீர்­வு­க­ளுக்­காக அதி­கா­ரிகள் துரி­த­மாக இயங்கி வரு­கி­றார் கள். இன்னும் ஒரு வார­கா­லத்தில் இவ்­வி­வ­கா­ரத்­துக்கு தீர்வு பெற்றுத் தரு வேன் என பிர­தமர் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளிடம் உறு­தி­ய­ளித்தார்.

இறு­தியில் முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் தங்கள் சமூ­கத்தின் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு வழங்­கப்­படும் வரை அமைச்சுப் பத­வி­களை பொறுப்­பேற்­ப­தில்லை தெரி­வித்த நிலையில் இந்த சந்­திப்பு நிறைவு பெற்­றுள்­ளது.

இச் சந்­திப்பு தொடர்பில் முஸ்லிம் காங்­கிரஸ் விடுத்­துள்ள அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலை­மை­யி­லான முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் குழு நேற்று விக்­கி­ர­ம­சிங்­கவை சந்­தித்த பின்னர், அடுத்த கட்­ட­மாக உள்­ளூ­ராட்சி பிரி­வுகள் சம்­பந்­த­மான பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்­வு­காணும் நோக்கில் இன்­றி­ரவு அமைச்சர் வஜிர அபே­வர்த்­த­னவை சந்­தித்து கலந்­து­ரை­யா­டு­வ­தற்கு பிர­தமர் ஏற்­பாடு செய்­துள்ளார்.

முஸ்லிம் மக்­களின் பிரச்­சி­னைகள் தொடர்பில் அர­சாங்­கத்­திடம் முன்­வைத்­துள்ள கோரிக்­கைகள் நிறை­வேற்­றப்­படும் வரை அமைச்சுப் பத­வி­களை மீளப் பொறுப்­பேற்­ப­தில்லை என்று நேற்று (21) நடை­பெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் உயர்­பீட கூட்­டத்தில் ஏக­ம­ன­தாக தீர்­மா­னிக்­கப்­பட்­டது.

இது ­தொ­டர்பில் 22 ஆம் திகதி பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை சந்­திப்­ப­தற்கும் இதன்­போது இணக்கம் காணப்­பட்­டது. இதன்­பி­ர­காரம், ஸ்ரீலங்கா முஸ் லிம் காங்­கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தலை­மை­யி­லான முஸ்லிம் பராா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் குழு பிற்­பகல் 2 மணி­ய­ளவில் ஏ.எச்.எம். பெள­சியின் வீட்டில் ஒன்­று­கூ­டி­னார்கள்.

பிர­த­ம­ரிடம் பேச­வேண்­டிய விட­யங்கள் குறித்து இதன்­போது ஆரா­யப்­பட்­டன. முஸ்­லிம்­களின் பாது­காப்பு விட­யங்கள், கைது­செய்­யப்­பட்­டுள்ள அப்­பா­வி­களில் மீத­முள்­ள­வர்­களை விடு­தலை செய்தல், கல்­முனை வடக்கு பிர­தேச செய­லக விவ­காரம், வாழைச்­சேனை பிர­தேச சபை எல்லை விவ­காரம், தோப்பூர் உப பிர­தேச செய­லக தர­மு­யர்த்தல் உள்­ளிட்ட பல விட­யங்கள் குறித்து இதன்­போது கலந்­து­ரை­யா­டப்­பட்­டன.

குறிப்­பாக கல்­முனை வடக்கு பிர­தேச செய­லகம் குறித்து இங்கு விசேட கவ னம் செலுத்­தப்­பட்­டது. இதன்­பின்னர் பிற்­பகல் 3:30 மணி­ய­ளவில் முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை அலரி மாளி­கையில் சந்­தித்து கலந்­து­ரை­யா­டி­னார்கள்.

ஏற்­க­னவே கலந்­து­ரை­யா­டப்­பட்ட பிரச்­சி­னைகள் தொடர்பில் இதன்­போது பிர­த­ம­ரிடம் எடுத்துக் கூறப்­பட்­டது. கல்­முனை நிர்­வாகப் பிரச்­சி­னைக்கு உட­னடி தீர்வு வழங்­கப்­பட வேண்­டு­மென ரவூப் ஹக்கீம் இதன்­போது வலி­யு­றுத்திக் கூறினார்.

முன்னாள் முஸ்லிம் அமைச்­சர்கள் நாளை அமைச்சு பத­வி­களை பொறுப்­பேற்­கு­மாறும், இன்னும் ஒரு வாரத்­துக்குள் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு வழங்­கு­வ­தா­கவும் பிர­தமர் இதன்­போது கூறினார்.

ஆனால், கூறப்­ப­டு­வ­து­போல பிரச்சினைகள் தீர்க்கப்படுவதில்லை என்றும், இதற்கு தீர்க்கமான முடிவுகளை எட்டும்வரை அமைச்சுகளை பொறுப்பேற்ப தில்லை எனவும் முஸ்லிம் எம்.பி.க்கள் தங்களது நிலைப்பாட்டை பிரதமரிடம் தெரிவித்துள்ளனா்.

பிரச்சினைகளை தீர்த்துக்கொள்வதில் ரவூப் ஹக்கீம் தலைமையிலான முஸ் லிம் எம்.பி.க்கள் காட்டிய தீவிரத்தன்மையை புரிந்துகொண்ட பிரதமர், உடனே முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து தீர்க்கமானதொரு முடிவை எடுக்குமாறு உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாணசபை மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் வஜிர அபயவர்தனவுக்கு பணிப்புரை விடுத்துள்ள தாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.