புலமை பரிசில் பரீட்சை ஆகஸ்ட் 4 இல் உயர் தர பரீட்சை ஆகஸ்ட் 5 இல் ஆரம்பம் - THAMILKINGDOM புலமை பரிசில் பரீட்சை ஆகஸ்ட் 4 இல் உயர் தர பரீட்சை ஆகஸ்ட் 5 இல் ஆரம்பம் - THAMILKINGDOM
  • Latest News

    புலமை பரிசில் பரீட்சை ஆகஸ்ட் 4 இல் உயர் தர பரீட்சை ஆகஸ்ட் 5 இல் ஆரம்பம்

    இம்முறை க.பொ.த உயர்த தர பரீட்சை ஆகஸ்ட் மாதம் 5 ஆம் முதல் 31 அம் திகதி வரை நடத்துவதற்கு இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    உயர்தர பரீட்சைக்காக புதிய பாடத் திட்டத்திற்கு அமைவாக 198,229 மாண வர்களும், பழைய பாடத்திட்டத்திற்கு அமைவாக 139,475 மாணவர்களும் தோற்றவுள்ளனர்.

    இதன்பிரகாரம் உயர்தர பரீட்சைக் கான விண்ணப்பதாரிகளின் முழுத் தொகை 337,704 ஆகும். மேலும் 2678 பரீட்சை நிலையங்கள் இம்முறை உயர்தர பரீட்சை நடத்தப்படவுள்ளது. அத் துடன் ஐந்தாம் தர புலமை பரிசில் பரீட்சை ஆகஸ்ட் மாதம் 4 ஆம் திகதி நடத் துவதற்கு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

     இதன்படி குறித்த பரீட்சைக்கு சிங்கள மொழி மூலமாக 255,529 மாணவர்களும் .தமிழ் மொழி மூலமாக 83,840 மாணவர்களும் தோற்றவுள்ளனர். இதன் பிர காரம் மொத்தமாக 339,369 மாணவர்கள் இம்முறை புலமை பரிசில் பரீட்சைக் காக தோற்றவுள்ளனர்.

    மேலும் 2995 பரீட்சை நிலையங்களில் புலமை பரிசில் பரீட்சை நடத்தப்பட வுள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. 

    • Web site Comments
    • Facebook Comments
    Item Reviewed: புலமை பரிசில் பரீட்சை ஆகஸ்ட் 4 இல் உயர் தர பரீட்சை ஆகஸ்ட் 5 இல் ஆரம்பம் Rating: 5 Reviewed By: tamil2017
    Scroll to Top