Breaking News

ராஜபக்ஷ ஆட்சியில் நீதிக்கு இடமில்லை - ரணில் விக்கிரமசிங்க

ராஜபக்ஷ ஆட்சியில் நீதிக்கு இடமில்லை தேர்தலில் பாடம் புகட்ட வேண்டுமென கடுமையாக சாடுகிறார் ரணில். 

ராஜபக்ஷாகளின் குடும்ப ஆட்சியில் நாட்டு மக்கள் ஒருபோதும் சுதந்திரத்தையும் நீதியையும் எதிர்பார்க்க முடியாது. மனிதாபிமானமும், மனசாட்சியும் இல்லாத இந்த அரசிடம் இருந்து எவ்வாறு நீதியை எதிர்பார்க்க முடியும்? இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கேள்வி எழுப்பியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது; இந்த ஆட்சியில் நீதி கோரி கருத்துக்களை வெளியிடுவோருக்கும் ஆர்பாட்டங்களை நடத்துவோருக்கும் இரத்தமும் சிறையும்தான் பரிசாகக் கிடைக்கும்.

அமெரிக்காவில் நடந்த படுகொலைக்கு நீதி கோரியே கொள்ளுப்பிட்டியில் மக்கள் ஆர்பாட்டம் செய்தனர். அதற்குக்கூட சுதந்திரத்தை வழங்க முடியாத இந்த அரசு, தங்கள் ஆட்சியில் இடம்பெற்ற இடம் பெற்றுகொண்டிருக்கும் அராஜகங்களுக்கு நீதியை வழங்கும் என்று நாம் எப்படி எதிர்பார்க்க முடியும்?

தமது அரசியல் நிகழ்ச்சி நிரலின்படி செயற்படாதவர்களை அரசியல் பழிவாங்கலுக்கு உட்படுத்துவதும், எந்த விடயத்திற்கு என்றாலும் நீதி கோரி ஆர்பாட்டங்களை மக்கள் நடத்தினால் பொலிஸாரையும் இராணுவத்தினரையும் ஏவிவிட்டு அவர்களைத் தாக்குவதும் கைது செய்வதும்தான் இந்த அரசின் வழக்கமான செயற்பாடுகளாகும்.

நடைபெறவுள்ள பொதுத்தேர்தல் இந்த அராஜகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனவும், அதற்க்கு ஏற்றார் போல மக்கள் தமது வாக்குகளை பயன்படுத்த வேண்டும் எனவும் கூறியுள்ளார்.