முள்ளிவாய்க்காவில் புலிகளை காட்டி கொடுத்தவர் இப்போது சுமந்திரனுடன்? - THAMILKINGDOM முள்ளிவாய்க்காவில் புலிகளை காட்டி கொடுத்தவர் இப்போது சுமந்திரனுடன்? - THAMILKINGDOM
 • Latest News

  முள்ளிவாய்க்காவில் புலிகளை காட்டி கொடுத்தவர் இப்போது சுமந்திரனுடன்?


  முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தம் இடம்பெற்று போராளிகள்
  இறுதியில் சரணடைந்தபோது அதில் புலனாய்வுத்துறைப் போராளிகள் பலரை இராணுவத்தின் காவலரணில் இருந்து காட்டிக்கொடுத்து அவர்களை காணாமல் ஆக்கப்பட்டதில் முக்கிய சூத்திரதாரி இப்போது தமிழரசுக்கட்சியுடன் இணைந்து சுமந்திரனுக்காக தேர்தல் பரப்புரைக்காக களம் இறங்கியுள்ளமை தாயக உறவுகளிடம் அச்சத்தை தோற்றுவித்துள்ளது.

  இது தொடர்பான முழுமையான பதிவு

  முழுப்பெயர்; :- சு.பிரபா


  நிரந்தர வதிவிடம்:- நெல்லியடி

  தொழில்:- புலனாய்வுத்துறை முகவர் (முள்ளிவாய்க்காலுக்கு முன்)

  குடும்ப பிண்ணனி :- தந்தைவழி வடமராட்சி தாய்வழி காரைநகர் தாயார் காரை.சுந்தரம்பிள்ளையின் தங்கை ஆவார் இவர்கள் மாத்துக்கு மாறு சம்மந்த திருமண உறவு மூலம் காரைநகர் நெல்லியடி உறவு இணைக்கப்பட்டது.

  சுப்பிரமணியம் அவர்கள் தலைவர் பிரபாகரன் மீது கடும் விசுவாசமும் நம்பிக்கையிம் கொண்டவர் அதனால்த்தான்1985 காலப்பகுதியில் பிறந்த தனது மகனுக்கு பிரபாகரன் என பெயரிட்டாராம் அவர்1987ல் வடமராட்சி மீதான லிபரேசன் ஒபரேசன் இராணுவ நடவடிக்கையின் போது இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டார் .

  சு.பிரபா 2005 காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் விடுதலைப்புலிகளின் புலனாய்வு முகவராகச் செயற்பட்டு 2006 உடன் வன்னியிலேயே தங்கிவிட்டார்.

  இறுதி யுத்தத்தின்போது முகவர்கள் அனைவரும் புலனாய்வுத்துறைப் படையணியில் இணைக்கப்பட்டு களமுனைக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டபோது கேப்பாபுலவு பகுதி முன்னரங்கப்பகுதியில் நிலையெடுத்திருந்தபோது இந்த புலனாய்வுத்துறை முகவர்களான சு.பிரபாவும், அவனுடைய சகாக்களும் 2009 மார்ச் இறுதிவாரம் ஆயுதங்களுடன் இராணுவக் கட்டுப்பாட்டிற்குத் தப்பியோடிவிட்டனர்.

  முள்ளிவாய்க்கால் அவலம் முடிந்து மக்கள் இராணுவக் கட்டுப்பாட்டிற்குள் வட்டுவாகல் பகுதியூடாகச் செல்ல அங்கு இராணுவத்தினருடன் சகஜமாக அனைத்துத் தொலைத்தொடர்பு வசதிகளுடனும் இராணுவப் பாதுகாப்புடனும் செவ்வாணன், சு.பிரபா, றூபன், கிறிஸ்ரி, போன்றோர் வந்து நின்று அங்கு விடுதலைப்புலிகளின் ஒரு போராளி கூட தப்பித்துவிடக்கூடாது என்ற சிந்தனையுடன் மே மாதம் 19 ஆம் திகதி வரை செயற்பட்டுக்கொண்டிருந்தனர்.


  அங்கு இவர்களால் காட்டிக்கொடுக்கப்பட்ட புலனாய்வுத்துறைப் போராளிகள், புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர்கள் என்ற வரிசையில் உள்ளகப் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் காந்தியண்ணை, கண்ணப்பன், திருமலை மாஸ்ரர், சுபன் அண்ணை (ஒருகண்ணை இழந்தவர்), காண்டீபன் மாஸ்ரர், ரமணன் அண்ணை, உட்பட 40 வரையான போராளிகள் அடங்குவர்.

  யோசப் முகாமில் புலனாய்வு அதிகாரியாகப் பணியாற்றிய மேஜர் அத்தநாயக்காவுக்கும், கப்டன் சம்பத்துக்கும் கூலிப்படையாகவும், செல்லப்பிள்ளையாகவும் இதே சு.பிரபா இயங்கிவந்தார்.

  அன்று பிரபா, செவ்வாணன் போன்றோரால் காட்டிக் கொடுக்கப்பட்டு பிடித்துச் செல்லப்பட்ட போராளிகள் விசாரிக்கப்பட்டு கடுமையான சித்திரவதையின்பின் கப்டன் சம்பந் என்ற இராணுவ புலனாய்வாளனால் ஒவ்வொருவராக சுட்டுக்கொல்லப்பட்டு யோசப் முகாமின் பின்புறத்தில் கிருஸ்ணன் கோயிலுக்கு அண்மையில் உள்ள சுடலையில் எரிக்கப்பட்டனர்.

  என்பது அனைத்தும் இந்த சுப்பிரமணிய பிரபாவுக்கு நன்கு தெரியும். போராளிகள் என்ன ஆனார்கள் என்பதை சுப்பிரமணிய பிரபாவால் உறுதிப்படுத்தி கூறமுடியும்.

  இவர்கள் இராணுவப் புலனாய்வுத்துறையின் மேஜர் அத்தநாயக்கா – கப்டன் சம்பந் (வாகீசால்; வவுனியா பஸ்நிலையத்தில் வைத்து சுடப்பட்டு படுகாயமடைந்து அதிஸ்ரவசமாக தப்பியவன்) அவர்கள் இருவருடைய நெருங்கிய ஏவளாலனாக முள்ளிவாய்க்காலுக்கு பின் பிரபா செயற்பட்டாu; இவனுடைய சகாக்கள் - கலையன்.

  பலர் இராணுவப் புலனாய்வுத்துறையிலிருந்து மெதுவாக விலத்திச் சென்றபோது பிரபாவும், ஜனாவும், செவ்வாணனும் தொடர்ந்தும் இயங்கினர்.

  இதில் சுப்பிரமணியபிரபா சர்வதேச தடுப்புப் புலனாய்வுப்பிரிவில் இணைந்து மலேசியாவில் சிலவருடங்கள் இயங்கியதோடு தமிழகத்திற்கும் சென்று புலனாய்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டு இன்று தாயகம் திரும்பியயுடன் இணைந்து தனது துரோகத்தைத் தொடர்கிறான்.

  சு.பிரபா மலேசியாவில் இருந்த காலத்தில் முகநூல் ஊடாக மூத்த போராளிகளையும், புலம்பெயர் அமைப்புக்களையும் பற்றி தவறான அவதூறுப் பரப்புரைகளை மேற்கொண்டிருந்தான்.

  ஆனால் இன்று முகநூலில் விடுதலைப்புலிகள், தலைவர், போராளிகள், தமிழ்த்தேசியம் போரினால் கொல்லப்பட்ட மக்கள் என பாசாங்கு செய்து சு.பிரபா நீலிக்கண்ணீர் வடிப்பது எத்தகைய அயோக்கியத்தனம்?

  இப்படிப்பட்ட பிரபாவுக்கு வக்காளத்து வாங்கும் சில முகநூல் கழிசடைகளையும், கட்சிச் செம்புகளையும் எண்ணும் பொழுது மிகவும் கேவலமாகவும், அருவருப்பாகவும் உள்ளது.

  கிளிநொச்சி இரணைமடுச்சந்தியிலுள்ள இராணுவப் புலனாய்வுத்துறை முகாம் அமைத்ததிலிருந்து இன்றுவரை இராணுவப் புலனாய்வுத்துறை கொழும்புத் தலைமையகத்திலுள்ள மேஜர் கமகே அவர்களின் கையொப்பத்துடனான அடையாள அட்டையுடன் இராணுவப் புலனாய்வுத்துறையின் கப்டன் தர அதிகாரத்துடன் இன்றுவரை இயங்கிக்கொண்டிருக்கிறான்.

  சு.பிரபா ஒருவேளை சந்தர்ப்ப சூழ்நிலையால் இராணுவத்திடம் பிடிபட்டு அவர்களுடன் இயங்கியிருந்ததாக வைத்துக்கொண்டாலும், இவனுடன் இயங்கிய மற்றவர்கள் கடந்த 2011 ஆம் ஆண்டு விலத்திச் செல்ல இராணுவப் புலனாய்வுத்துறை அனுமதித்தபோது, ராகுல், ராயூ, பார்த்தீபன், கஜன், விசால், றூபன், அருள், ஆகியோர் இராணுவப் புலனாய்வுத்துறையிலிருந்து விலத்திச் சென்றபோது செவ்வாணன், சு.பிரபா, ஜனாவும் விலத்திச் செல்லாது இன்றுவரை இராணுவப் புலனாய்வுத்துறையின் கைக்கூலியாக இயங்கிக் கொண்டிருக்கின்றனர்.

  வவுனியா பஸ் நிலையத்திற்குள் இருக்கும் கடைத்தொகுதியில் 3வது மாடி கட்டடத்தில் பிரபாவும், செவ்வாணனும், கப்டன் சம்பத்தும் ஆடிய கூத்துக்களும், கற்பழிப்புக்களும் கொஞ்சநஞ்சமல்ல. செட்டிகுளம் முகாமுக்கு தப்பிவந்த பெண் போராளிகளை சுப்பிரமணிய பிரபா தேடித்தேடிக் காட்டிக்கொடுத்தது மட்டுமல்ல அவர்களை மேற்படி கட்டடத்திற்கு கொண்டுவந்து இவர்கள் செய்த அநியாயங்கள் வார்த்தைகளால் சொல்லிட முடியாது.

  சு.பிரபாவே உன்னுடன் ஒன்றாக இருந்து ஒரு தட்டில் சாப்பிட்ட போராளிகளை உன்னால் நேற்றுவந்த பகைவர்களுக்கு எப்படி காட்டிக்கொடுக்க முடிந்தது.?

  இவன் போன்ற சமூகவிரோத தேசத்துரோகிகள் பலர் நல்லவர்கள் போல் வேசமிட்டு தேசயத் தலைவரால் உருவாக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்குள் நுழைந்து தம்மை சமூக சேவகர்களாக இனங்காட்டி இப்போது புலிகளையும் அவர்கள் போராட்டத்தையும் கொச்சைப்படுத்திவரும் சுமந்திரனுக்கு ஆதரவாக களம் இறங்கியுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது..

  தமிழர்கள்; இத்தகைய வேடதாரிகளை இனங்கண்டு ஒதுக்கிவிடுங்கள் உங்களுக்குத்தெரியும் யாரால் உங்களைக் காப்பாற்றி தீர்வினைப்பெற்றுத்தரமுடியும் என்று.

  இப்படியான துரோகிகளின் செயல்களால் உண்மையான விடுதலைப்புலிப் போராளிகளை சந்தேகிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. நீங்கள் ஒவ்வொருவரும் எடுக்கின்ற முடிவுகளும் மக்களின் சுவீட்சமான வாழ்விற்கு வித்திட்டுச் செல்லட்டும்.

  மேலும் இவர் தொடர்பிலும் இவர் யாருக்காக வேலை செய்கின்றார் ,இவரைப்போல தேசியம் பேசி கடந்தகாலத்தில் போராட்டத்திற்கு எதிராக செயற்பட்ட தமிழரசின் முகநூல் போராளிகளின் கடந்தகால செயற்பாடுகள் தொடர்பிலும் மிக விரைவில் ஆதாரங்களுடன் அடுத்த பதிவில்....

  -புலனாய்வு செய்தி-
  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: முள்ளிவாய்க்காவில் புலிகளை காட்டி கொடுத்தவர் இப்போது சுமந்திரனுடன்? Rating: 5 Reviewed By: Bagalavan
  Scroll to Top