நீ இங்கே பண்றது யாருக்கும் தெரியாதுன்னு நினைச்சியா? ஷிவானி தாயாரின் அதிர்ச்சி கேள்வி! - THAMILKINGDOM நீ இங்கே பண்றது யாருக்கும் தெரியாதுன்னு நினைச்சியா? ஷிவானி தாயாரின் அதிர்ச்சி கேள்வி! - THAMILKINGDOM
 • Latest News

  நீ இங்கே பண்றது யாருக்கும் தெரியாதுன்னு நினைச்சியா? ஷிவானி தாயாரின் அதிர்ச்சி கேள்வி!


  பிக்பாஸ் வீட்டில் ஹவுஸ்மேட்ஸ்களுக்கு இன்று முதல் ப்ரீஸ் டாஸ்க் நடக்க இருப்பதாகவும் போட்டியாளர்களின் உறவினர்கள் ஒவ்வொருவராக வருகை தர இருக்கின்றனர் என்ற தகவலை ஏற்கனவே பார்த்தோம் . 

  அந்த வகையில் சற்று முன் வெளியான முதல் புரமோவில் ஷிவானியின் தாயார் பிக்பாஸ் வீட்டிற்கு வருகிறார். 85 நாட்களாக பிரிந்திருந்த தனது தாயாரை பார்த்ததும் ஷிவானி அவரை கட்டி பிடித்துக்கொண்டு அழுகிறார். இருவரும் சிறிது நேரம் சென்டிமென்டாக நடந்து கொள்கின்றனர்.   

  அதன் பிறகு ஷிவானியை தனியே அழைத்து கண்டிக்கும் வகையில் அவருடைய தாயாரும் கேள்வி கேட்டது பெரும் அதிர்ச்சியாக இருக்கிறது. ‘எதுக்கு நீ இந்த ஷோவுக்கு வந்தாய்? நீ இந்த வீட்டிற்குள் செய்து கொண்டிருப்பது எல்லாம் வெளியில் யாருக்கும் தெரியாது என்று நினைத்து கொண்டு இருக்கிறாயா? என்று கண்டிக்கும்போது ஷிவானி அதிர்ச்சியின் உச்சத்திற்கே செல்கிறார்.   

  கடந்த சீசனில் லாஸ்லியாவின் தந்தை கேட்ட கேள்வி போல் கிட்டத்தட்ட ஷிவானியின் தாயார் இன்று கேட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: நீ இங்கே பண்றது யாருக்கும் தெரியாதுன்னு நினைச்சியா? ஷிவானி தாயாரின் அதிர்ச்சி கேள்வி! Rating: 5 Reviewed By: யாத்திரிகன்
  Scroll to Top