ஆரி விளையாட்டாய் சொன்னது நிஜமாவே நடந்துருச்சே: சோம் வீட்டில் நடந்த துயரம்! - THAMILKINGDOM ஆரி விளையாட்டாய் சொன்னது நிஜமாவே நடந்துருச்சே: சோம் வீட்டில் நடந்த துயரம்! - THAMILKINGDOM
 • Latest News

  ஆரி விளையாட்டாய் சொன்னது நிஜமாவே நடந்துருச்சே: சோம் வீட்டில் நடந்த துயரம்!


  பிக்பாஸ் வீட்டில் கடந்த சில வாரங்களுக்கு முன் ’எந்திரன்’ என்ற டாஸ்க் வைக்கப்பட்டபோது, சோம்சேகரை கோபப்படுத்த ஆரி பேசியபோது, ‘நீ உன்னுடைய பிரியத்திற்குரிய குட்டுவை விட்டுவிட்டு பிக்பாஸ் வீட்டுக்கு வந்திருக்கின்றாய், நீ போவதற்குள் அதற்கு ஏதாவது ஆகிவிட்டால் என்ன செய்வாய்’ என்று கேட்டார். 

  ஆனால் அதற்கு சோம், ‘அதற்கு ஒன்றும் ஆகாது’ என்று எந்திரனாக பதிலளித்தார். இதனை சோம், அர்ச்சனாவிடம் சொல்லி வருத்தப்பட்டார் என்பதும், குட்டு என்பது சோம் வளர்க்கும் செல்ல நாய் என்பது குறிப்பிடத்தக்கது. 

  இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி உண்மையாகவே சோம் ஆசை ஆசையாய் வளர்த்த குட்டு என்ற நாய் இறந்துவிட்டதாக தெரிகிறது. 2015ஆம் ஆண்டு முதல் ஐந்து ஆண்டுகளாக ஆசையாய் வளர்த்து வரும் குட்டு இறந்த செய்தி சோம்க்கு தெரிந்தால் அவரது வருத்தம் அளவில்லாமல் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 

  சமீபத்தில் லட்டர் எழுதும் டாஸ்க்கில் கூட சோம், தனது ஆசை குட்டுவுக்குத்தான் லட்டர் எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது. சோம்சேகரை கோபப்பட, வருத்தப்பட வைக்க ஆரி விளையாட்டாய் டாஸ்க்கில் சொன்னது தற்போது நிஜமாகவே நடந்துவிட்டது எதிர்பாராத ஒன்றாகவே கருதப்படுகிறது.
  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: ஆரி விளையாட்டாய் சொன்னது நிஜமாவே நடந்துருச்சே: சோம் வீட்டில் நடந்த துயரம்! Rating: 5 Reviewed By: யாத்திரிகன்
  Scroll to Top