பாலாஜியை வெளுத்து வாங்கிய கமல், ஆரிக்கு பாராட்டு! - THAMILKINGDOM பாலாஜியை வெளுத்து வாங்கிய கமல், ஆரிக்கு பாராட்டு! - THAMILKINGDOM
 • Latest News

  பாலாஜியை வெளுத்து வாங்கிய கமல், ஆரிக்கு பாராட்டு!


  பிக் பாஸ் வீட்டில் நேற்றைய தினம் 90வது நாள் நடந்த சம்பவங்களின் தொகுப்பு.. 

  பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் பாலாஜி பழைய நிலைக்கு திருப்பிவிட்டதால் அவர் ஆரியுடன் மிக கேவலமாக கத்தி பொருட்களை தூக்கி போட்டு தனது கோபத்தினை வெளிப்படுத்தினார். கமல் அதனை காட்டும் வெள்ளி ஆண்டு நடந்த சம்பவங்களை காட்டினார்.   

  ஷிவானி பிரச்சனை பற்றி பேசியதற்காக பாலாஜிக்கும் ஆரிக்கும் பெரிய சண்டை நடந்தது. நீ வெளியே இருந்தால் கிடைக்கும் மரியாதையே வேற என மிரட்டும் தொனியில் பாலாஜி ஆரியிடம் பேசினார்.  

  அதன் பின் தான் வீட்டுக்கும் அகம் டிவி வழியாக பேச தொடங்கினார்.  

  ஷிவானி அம்மா போன் கால்  

  ஷிவானி மட்டும் இந்த வாரம் மிகவும் சோகமாகவே இருந்த நிலையில் அவரது அம்மாவை வீடியோ கால் மூலமாக ஷிவானியுடன் பேச வைத்தார் கமல். ஷிவானி அம்மாவை எதிர்த்து பேசாமல் இருந்தது அன்பின் வெளிப்பாடு என கமல் சொன்னார். அதன் பின் உங்கள் சுமைகளை குழந்தைகள் மீது இறக்கி வைக்காதீர்கள் என அட்வைஸும் கொடுத்தார் கமல்.  

  அதன் பின் தான் பாலாஜி - ஆரி பிரச்சனைக்கு வந்தார் கமல்  

  ஆரி மீது உங்களுக்கு என்ன பிரச்சனை?  

  ஆரியை மட்டும் தனியாக எழுந்து அமரவைத்துவிட்டு மற்றவர்களிடம் அவருடன் உங்களுக்கு என்ன பிரச்சனை என கேட்டார் கமல். ஒவ்வொருவராக தங்கள் பிரச்சனையா கூறினர்.  

  பாலாஜியும் தன் பங்கிற்கு 'அவர் எப்போதும் குறை கூறிக்கொண்டே இருக்கிறார்' என குற்றம்சாட்டினார், அதன் பின் தான் பாலாஜியை விளாச தொடங்கினர் கமல், அவர் இந்த வாரம் மிக மோசமாக சண்டை போட்டது பற்றியும் விமர்சித்தார். இரண்டடி ஏறினால் ஒன்றரை அடி சருக்குகிறார் என கிண்டல் செய்தார். எல்லைமீறிய பாலாஜியை கமல் இன்று வெளுத்து வாங்கிவிட்டார் என்றும் சொல்லலாம். 
   
  இந்த வாரம் வீட்டுக்கு வந்த உங்கள் குடும்பத்தினர் ஆரியை பற்றி மறைமுகமாக ஹிண்ட் கொடுத்தார்கள். அதை நீங்கள் மாற்றி எடுத்துக்கொண்டீர்களோ என்றும் கமல் மற்ற போட்டியாளர்களை கேட்டார்.  

  பாலாஜி ஆரியை மோசமாக பேசும்வரை சும்மா இருந்துவிட்டு. அதன்பின் ஆரி எதாவது பேச தொடங்கினால் அவரை ரம்யா கூட்டிச்சென்றுவிடுகிறார் என கமல் கூறினார். இதன் மூலமாக பாலாஜிக்கு ஜால்ரா அடித்து கொண்டிருந்த ரம்யாவுக்கும் ஒரு பெரிய குட்டு வைத்திருக்கிறார் கமல்.  

  ஆரி மட்டும் ஜெயிக்க கூடாது என நினைப்பது எப்படி போட்டியாகும்  

  ஆரி மட்டும் ஜெயிக்கக்கூடாது என பாலாஜி நினைப்பது எப்படி நல்ல போட்டியாக இருக்கும் என கமல் கோபத்துடன் கேட்டார். அது மட்டுமின்றி ஆரியையும் கமல் பாராட்டி பேசினார். ஆரி பற்றி மற்றவர்கள் சொன்ன குறையை அவர் விரும்பினால் திருத்திக்கொள்ளலாம் என கமல் கூறினார்.  

  நாமினேஷன்.. ஒருவரை காப்பாற்றிய கமல்  

  அதன் பின் நாமினேஷனில் இருந்து கேபியை கமல் காப்பாற்றினார். மீதம் இருப்பவர்களில் யார் வெளியே போவது என நாளை தெரியவரும். அது யாரா இருக்கும்னு அதுவரை கெஸ் பன்னிட்டே இருங்க.


  Next
  This is the most recent post.
  பழைய இடுகைகள்
  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: பாலாஜியை வெளுத்து வாங்கிய கமல், ஆரிக்கு பாராட்டு! Rating: 5 Reviewed By: யாத்திரிகன்
  Scroll to Top