Breaking News

அதானி குழுமத்தின் தலைவரை சந்திக்கவுள்ள ஜனாதிபதி!

 


அதானி குழுமத்தின் தலைவரான கௌதம் அதானியை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று  (25) இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக த ஹிந்து பத்திரிகை தெரிவித்துள்ளது.

கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் இதன் ​போது கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கௌதம் அதானி தனிப்பட்ட சுற்றுலாவிற்காக இன்றைய தினம் இலங்கை வருகை தரவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.