மாவீரர் வாரத்தில் யாழில் குயர் விழா! - அம்பலமாகும் அரச அடிவருடிகள்(படங்கள்) - THAMILKINGDOM மாவீரர் வாரத்தில் யாழில் குயர் விழா! - அம்பலமாகும் அரச அடிவருடிகள்(படங்கள்) - THAMILKINGDOM
 • Latest News

  மாவீரர் வாரத்தில் யாழில் குயர் விழா! - அம்பலமாகும் அரச அடிவருடிகள்(படங்கள்)

     எதிர்வரும் மாவீரர் வாரத்தில் அந்த நிகழ்வை கொச்சைப்படுத்தும் முகமாக அதே நாட்களில் யாழ்ப்பாணத்தில் குயர் விழா என பெயரிட்டு பாலினம் மாறும் நபர்களையும் ஒரேபாலின சேர்கக்கையாளர்களையும் ஊக்குவிக்கவும் அவர்களை கொண்டாடவும் ஓர் நிகழ்விற்கு ஏற்பாடுகள் இடம்பெற இருப்பதாக தெரிய வருகிறது.

  தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் ஆகுதியாகிய ஒவ்வொரு மானமா வீரரையும் நெஞ்சில் சுமந்து  ஒப்பற்ற தியாகங்களை மதித்து ஒவ்வொரு ஈழத்தமிழரும் ,புலம்பெயர் தமிழரும் நவம்பர் மாதம் 21 திகதி முதல் 27திகதி வரை மாவீரர் வாரமாக அவர்களை பூசித்துவரும் வேளையில் அதனை திசை திருப்புவதற்காகவும் அந்த நினைவு கூரலை எதிர்வரும் காலத்திலும் மடைமாற்றவும் திட்டமிடப்பட்டிருப்பதாக தெரியவருகின்றது.

  இதனை பாலியல் உருமாறுபவர்களையோ அல்லது அவர்களை கொண்டாடுபவர்களோ இதுவரைகாலமும் தமிழகத்தில் இருந்தபோதும் அந்த கலாச்சார நடைமுறைகளை தாயகத்தில் கொண்டுவரும் ஒரு போக்கிலித்தனமாக செயற்பாட்டினை தாயகத்தில் பாலினம் மாறிய சில நபர்களும் இணைந்து முன்னெடுப்பது மிகவும் வேதனையானது மட்டுமல்ல அவர்கள் தெரிவு செய்த காலப்பகுதி எவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல.  இந்த நிகழ்வினை ஏற்பாடு செய்துள்ள இரண்டு முக்கிய நபர்களில் விபரம் கீழே உள்ளது அவர்களில் ஒருவரது கடந்தகால பதிவொன்று அதன்கீழே இணைக்கப்பட்டுள்ளது.


  இதனை ஒழுங்குசெய்ய ஏற்பாட்டாளர்களில் ஒருவர் நேரடியாகவே யாழ்ப்பாணத்தில் கடந்தவருடம் அரச அடிவருடிகளால் ஒழுங்குசெய்யப்பட்ட சுதந்திரதினநாளில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் அவர்களோடு இணைந்து செயற்பட்டவருமாவார்.


  இதனை இதுவரைகாலமும்  இலக்கிய வாதிகளாக காட்டிக்கொண்டு தமிழீழ விடுதலைப்போராட்டத்தை கொச்சைப்படுத்தி எழுதிவந்த சோபா சக்தி மற்றும் அவரோடிணைந்தவர்களை பின்தொடரும் நபர்களே முன்னிலையில் நிற்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

  இதே போன்று 2016 இலும் கொழும்பிலுள்ள சிலரால் மாவீரர் வாரத்தில் கோலிப்பண்டிகை போன்றதொரு நிகழ்வை யாழில் ஏற்பாடு செய்தபோது அதனை யாழ் இளைஞர்கள் பச்சை மட்டை அடிகொடுத்து(செய்தியை படிக்க இணைப்பு கீழே உள்ளது) எதிர்த்ததன் காரணமாக அந்த நிகழ்வு தடைசெய்யப்பட்டது என்பதையும் அதனையும் முதன்முதலில் தமிழ்கிங்டமே வெளிப்படுத்தியது என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

  இது தொடர்பான மேலதிக தகவல்கள் விரைவில் வெளிக்கொண்டுவரப்படும்

  தொடர்புடைய முன்னைய செய்தி மாவீரர் நாளில் யாழில் “கண்ணனின் லீலைகள்“-கூத்து பண்டிகை(ஆதாரம் இணைப்பு) 


  கோலிபண்டிகை நிறுத்தப்பட்டது! பச்சைமட்டை அடி காரணமா?(படங்கள்)
  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: மாவீரர் வாரத்தில் யாழில் குயர் விழா! - அம்பலமாகும் அரச அடிவருடிகள்(படங்கள்) Rating: 5 Reviewed By: Thamil
  Scroll to Top