Breaking News

கோவிலுக்குள் இருந்து வெளியில் வரும்பொழுது தர்மம் செய்யலாமா?

 


தர்மம் தலைகாக்கும் தக்க சமயத்தில் உயிர் காக்கும் என்பதை நாம் கேள்விப்பட்டிருப்போம். நாம் பிறருக்கு செய்யக்கூடிய தர்மம் நமக்கு மிகப்பெரிய பலனை அள்ளி கொடுக்கும். நாம் செய்யக்கூடிய கர்மவினையை வைத்து தான் நம்முடைய பிறப்பு அமையும். நாம் இந்த மண்ணுலகத்தில் பிறந்து நமக்கு கிடைக்கக்கூடிய மிகப்பெரிய சந்தோஷம் கஷ்ட நஷ்டங்கள் இதெல்லாமே இறைவனால் கொடுக்கப்படுகிறது என பலராலும் நம்பப்படுகிறது.

நாம் அனைவரும் கடவுளிடம் கேட்பது ஒன்றே ஒன்று. எனக்கு எல்லாவித நன்மைகளையும் தந்தருளும் கடவுளே எனக் கேட்போம். யாரும் கடவுளிடம் எனக்கு துன்பத்தை துயரத்தை தா என கேட்பதில்லை. எல்லோருக்கும் இன்பமாக சந்தோசமாக இருக்க வேண்டும் என்பதே ஆசை. இறைவனும் பாரபட்சம் பார்த்து இவனுக்கு கஷ்டத்தைக் கொடுக்க வேண்டும் துன்பத்தை கொடுக்க வேண்டுமென கொடுப்பதில்லை.

நாம் செய்த கர்ம வினைகளே நம்முடைய இன்பத்திற்கும் துன்பத்திற்கும் சுகத்திற்கும் துக்கத்திற்கும் எல்லாவற்றுக்கும் காரணம். மனிதர்கள் பொதுவாக அதிக அளவு துன்பங்கள் வரும் பொழுது மட்டுமே இறைவனையும் கோவிலையும் அதிக அளவில் நாடிச் செல்கிறார்கள். கோவிலுக்கு சென்று இறைவனிடம் என்னுடைய எல்லா கஷ்டங்களையும் துன்பங்களையும் தீர்த்து விட கடவுளை என வேண்டிக் கொள்வோம். கடவுளிடம் நம்முடைய கஷ்டங்களையும் துன்பங்களையும் நீக்கிவிடு என வேண்டிக்கொண்டு கோவிலை விட்டு வெளியே நான் வரும்பொழுது நம்மை விட மிகவும் ஏழ்மையான நிலையில் பல பிச்சைக்காரர்கள் பிச்சை எடுத்துக் கொண்டிருப்பார்கள்.

மிக ஏழ்மை நிலையில் இருக்கக்கூடிய அந்த பிச்சைக்காரர்களை படைத்ததும் இறைவன் தான். ஆனால் அதைவிட அதிக ஆசீர்வாதமாக உங்களை இறைவன் படைத்திருக்கிறார். சிறிதளவு கஷ்டத்தை கொடுத்து இருப்பார். ஆனால் அவர்களை நோக்கி பாருங்கள் உங்களை விட மிகவும் ஏழைகளாக பிச்சை எடுத்து வாழ்க்கை நடத்துபவர்கள். கோவிலுக்குள் சென்று இறைவனிடம் நம்முடைய பிரச்சனைகளுக்கு வேண்டுதல்களை வைக்கும் நாம் வெளியில் வந்து பிச்சைக்காரர்கள் நம்மிடம் உணவுக்காக கேட்கும் அந்த வேண்டுதலை நாம் கேட்க விரும்புவதில்லை.

ஒருவிதமாக முகம் சுளிக்கும் விதமாகவே அவர்களை நாம் பார்க்கிறோம். அதிலும் ஒரு சிலர் கோவிலுக்கு சென்று விட்டு இறைவனிடம் வேண்டுதல் செய்து திரும்பும் பொழுது நாம் பிச்சைக்காரர்களுக்கு பிச்சை கொடுக்கக்கடாது என சொல்வார்கள். உண்மையில் ஒன்றை நினைத்துப் பாருங்கள் உங்களைப் போலவே அவர்களையும் படைத்தது நீங்கள் வணங்கக் கூடிய அந்த இறைவனே. இறைவன் யாரிடத்திலும் எந்த இடத்திலும் நீ என்னை வணங்கிய பிறகு பிச்சைக்காரர்களுக்கு பிச்சை போட கூடாது அவர்களுக்கு எந்த உதவியும் செய்யக்கூடாது என்று சொல்லவில்லை. உண்மையில் நீங்கள் பிச்சைக்காரர்களுக்கு பிச்சை போடும் பொழுதே இறைவன் மிகப் பெரிய அளவில் சந்தோஷம் அடைவார்.

உங்களுடைய கஷ்டங்கள் அவர்களை விட மிகப் பெரியது அல்ல என்பதை உங்களுக்கு காண்பிப்பார். ஆனால் ஒரு பொழுதும் நீங்கள் இதை எண்ணிப் பார்ப்பதில்லை. உங்கள் சுகதுக்கங்களை கஷ்ட நஷ்டங்களை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். யார் எப்படி போனால் எனக்கென்ன நான் மட்டும் எந்தவித கஷ்டமும் இல்லாமல் சந்தோஷமாக இருக்க வேண்டுமென நினைக்கிறீர்கள். ஆனால் அது தவறு ஒவ்வொருவரையும் ஒவ்வொரு காரணத்திற்காகவே அந்தந்த நிலைகளில் இறைவன் படைத்திருக்கிறார்.

கோவிலுக்கு சென்று இறைவனை வழிபட்டு விட்டு வெளியே வரும் நீங்கள் பிச்சைக்காரர்களுக்கு பிச்சை கொடுப்பது உங்களுடைய கர்ம வினைகளில் ஒன்றாகக் கூட இருக்கலாம். இறைவன் படைத்த எல்லாவற்றிற்கும் ஒவ்வொரு காரணம் இருக்கிறது. உங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கக்கூடிய சுகபோகம் கஷ்ட நஷ்டங்கள் எல்லாவற்றிற்கும் ஒரு காரணம் இருக்கும். இறைவன் எதையும் வேண்டுமென்றே உங்களுக்காக கொடுப்பதில்லை.

உங்களை மட்டுமே குறிவைத்து உங்களுக்கு கஷ்டத்தையும் கொடுப்பதில்லை. பல நேரங்களில் இறைவன் காண்பிக்கும் ஒவ்வொரு விஷயங்களையும் சரியாக நீங்கள் கவனிக்காமல் அந்த துக்கத்தில் கஷ்டத்தை விட்டு வெளியே வராமல் இருக்கிறீர்கள். இறைவன் பல இடங்களில் உங்களுக்கான நல்ல வசதி தொடர்ந்து காண்பித்துக் கொண்டே இருப்பார். ஆனால் நீங்கள் எதையுமே கவனிப்பதில்லை. கவனிக்காமல் இருந்து கொண்டே இறைவனை தொடர்ந்து குறை சொல்லிக் கொண்டே இருப்பீர்கள்.


பிச்சைக்காரர்களுக்கு இருக்கும் பசியை போக்க உங்களை இறைவன் கோவிலுக்கு வர வைத்து அவர்களுக்கு பிச்சை கொடுத்து அவர்களுடைய கஷ்டத்தை தீர்த்து வைப்பது போல யாரையாவது உங்களுடைய கஷ்டத்தை தீர்ப்பதற்காக அனுப்பி வைப்பார். இதில் நீங்கள் நம்பிக்கை வைத்து இருந்தாலே போதும். எல்லோரையும் ஏதாவது ஒரு காரணத்திற்காகவே இறைவன் படைத்திருப்பார்.

ஆகையால் இனிமேல் நீங்கள் கோவிலுக்கு சென்று வெளியில் வரும்பொழுது அல்லது யாராவது உங்களிடம் உதவி கேட்கும் பொழுதும் தயங்காமல் அவர்களுக்கு உதவி செய்யுங்கள். பிறருக்கு உதவி செய்யவும் உங்களுக்கு பிறர் உதவி செய்யவுமே நம்மை இறைவன் படைத்திருக்கிறான். ஆகையால் இந்த சந்தோஷமான வாழ்க்கையை அனுபவப்பூர்வமாக உணர்ந்து அறிந்து தன்னுடைய வாழ்க்கையை சந்தோஷமாக வாழுங்கள்.