Breaking News

கத்ரீனா கைப்புக்கு திருமணம்!

‘பாலிவுட்’ பிரபல நாயகி கத்ரீனாகைப் பற்றி ஏராளமான ‘காதல்’ கிசுகிசுக்கள் வெளியாகின.

30 வயதை கடந்துள்ள அவர் இதுவரை திருமணம் குறித்து வாய் திறக்கவில்லை. ஆனால் சமீபகாலமாக இவர் திரைப்படங்களில் நடிப்பதை குறைத்து விட்டார். முக்கிய படங்களில் நடிப்பதைக் கூட தவிர்த்து விட்டார்.

‘பாண்டம்’, ‘தில்வாலே’, ‘பாரிஜாமிஸ்தானி’ ‘முகஞ்சதாரோ’ ஆகிய படங்களில் நடிக்க வந்த வாய்ப்பை கத்ரீனாகைப் ஏற்கவில்லை. இதில் நடித்தால் படப்பிடிப்புக்கு நீண்ட நாட்கள் ‘கால்ஷீட்’ ஒதுக்க வேண்டியது இருக்கும் என்பதால் அவர் இந்த படங்களை உதறி விட்டார் என்று கூறப்படுகிறது.

வயது ஏறிக் கொண்டே போவதால் கத்ரீனாகைப் இப்போது நடிப்பதை குறைத்து திருமணத்துக்கு தயார் ஆகி வருவதால்தான் இந்த முடிவை அவர் எடுத்து இருக்கிறார். விரைவில் திருமண அறிவிப்பு வர வாய்ப்பு இருக்கிறது என்று மும்பை திரை உலக வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

கத்ரீனாகைப்பிடம் சிக்கப்போகும் தொழில் அதிபர் யார் என்பதை ஆவலுடன் எதிர்பார்ப்பதாக பாலிவுட் பிரபலங்கள் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்கிறார்கள்.