முழு நாட்டினையும் கைப்பற்றி தமிழீழ நாடாக மாற்ற த.தே.கூ. திட்டம் :குணதாச - THAMILKINGDOM முழு நாட்டினையும் கைப்பற்றி தமிழீழ நாடாக மாற்ற த.தே.கூ. திட்டம் :குணதாச - THAMILKINGDOM

 • Latest News

  முழு நாட்டினையும் கைப்பற்றி தமிழீழ நாடாக மாற்ற த.தே.கூ. திட்டம் :குணதாச

  சிந்தனை தமிழ் தேசியக்கூட்டமைப்பிற்கு ஏற்பட்டு விட்டது எனத் தெரிவித்த தேசப்பற்றுள்ள
  தேசிய இயக்கம் எதிர்க்கட்சி ஆட்சியமைத்தால் தீவிரவாதம் வலுப்பெறும் எனவும் தெரிவித்தது. சிங்கள மக்களின் கையிலேயே ஆட்சி மாற்றம் உள்ளது. இதனை தமிழர் பிரதிநிதிகள் தெளிவாக விளங்கிக்கொள்ள வேண்டும் எனவும் அவ்அமைப்பு தெரிவித்தது. ஜனாதிபதி தேர்தலின் போது பொது வேட்பாளராக விக்னேஸ்வரனை நியமிப்பது தொடர்பில் எழுந்துள்ள கருத்து தொடர்பில் வினவியபோதே அவ் இயக்கத்தின் தலைவர் குணதாச அமரசேகர மேற்கண்டவாறு கருத்து தெரிவித்தார்.

  இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்; வடக்கு கிழக்கினை பிரித்து தனித்தமிழீழத்தினை உருவாக்கும் எண்ணமே தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு இருக்கின்றது என நினைத்துக்கொண்டுள்ளோம். ஆனால், அவர்கள் முழு நாட்டினையும் கைப்பற்றி தமிழீழ நாடாக மாற்றவே திட்டம் தீட்டுகின்றனர். விக்னேஸ்வரனை பொது வேட்பாளராக நிறுத்தி தேர்தலில் வெற்றி பெறச் செய்ய முடியுமா? அவ்வாறு வெற்றி பெற சிங்கள மக்கள் ஒருபோதும் ஆதரிக்கமாட்டார்கள். இந்த நாட்டில் சிங்கள மக்களே ஜனாதிபதியை தெரிவு செய்கின்றனர். 

  அவர்களின் கையிலேயே ஆட்சி மாற்றம் தங்கியிருக்கிறது. இப்படி இருக்கையில் தமிழ் பிரதி நிதிகளால் ஒரு போதும் ஆட்சி மாற்றத்தினை ஏற்படுத்தவோ ஜானாதிபதியாக தெரிவாகவோ முடியாது. மேலும், எதிர்க்கட்சியே விடுதலைப்புலிகளுடன் ஒப்பந்தங்களை மேற்கொண்டு நாட்டில் தீவிரவாதத்தினை வளர்த்து விட்டது. அவர்களினால்தான் இராணுவ வீரர்களும், அப்பாவி பொதுமக்களும் கொல்லப்பட்டனர். இப்போது மீண்டும் சர்வதேச அளவில் சென்று நாட்டிற்குள் தீவிரவாதத்தினை கொண்டுவரவே எத்தனித்துக்கொண்டு இருக்கின்றனர். 

  எதிர்க்கட்சி ஆட்சியமைக்குமானால் நாட்டில் மீண்டும் பயங்கரவாதம் உருவாக்கப்படும். அது மட்டுமன்றி சர்வதேச தலையீடுகள் நாட்டில் ஏற்பட்டு நாடு முழுமையான சர்வதேச கட்டுப்பாட்டினுள் வந்துவிடும். இதனை ஏற்படுத்தவே எதிர்க்கட்சி மற்றும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு மற்றும் புலம்பெயர் அமைப்புக்கள் அனைத்தும் ஒன்றிணைந்து சர்வதேசத்துடன் கைகோர்த்துள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.
  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: முழு நாட்டினையும் கைப்பற்றி தமிழீழ நாடாக மாற்ற த.தே.கூ. திட்டம் :குணதாச Rating: 5 Reviewed By: Bagalavan
  Scroll to Top