Breaking News

பல்கலையில் தொடரும் புலி பிடிப்பு நாடகங்கள் -வீரகேசரி

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு

சப்­ர­க­முவ பல்­க­லைக்­க­ழ­கத்தின் மாணவர் விடு­திக்குள்
கடந்த ஆகஸ்ட், மூன்றாம் திகதி அதி­காலை பிர­வே­சித்த வன்­மு­றை­யா­ளர்கள் சிலர் சமூக விஞ்­ஞானம் மற்றும் மொழி பீடத்தின் முதலாம் ஆண்டு மாணவன் ஒருவர் மீது மூர்க்­கத்­த­ன­மான தாக்­கு­தலை மேற்­கொண்­டி­ருந்­தனர்.

யாழ்ப்­பாணம், முக­மாலை பிர­தே­சத்தை சேர்ந்த சந்­தி­ர­குமார் சுதர்ஷன் என்ற மாண­வரே சம்­ப­வத்தில் தாக்­கு­த­லுக்கு உள்­ளா­கி­யுள்ளார். இவ்­வாறு தாக்­கு­த­லுக்கு உள்­ளா­கி­யி­ருந்த நிலையில் தாக்­கு­தலும் அதனை சுற்­றிய சம்­ப­வங்­களும் பல்­வேறு சந்­தே­கங்­களை தோற்­று­விக்­கின்­றன.

தென் இலங்­கையில் அல்­லது வடக்கு கிழக்­கிற்கு வெளியே தமிழ் மாண­வர்கள் அல்­லது தமிழ் பேசும் மாண­வர்கள் அதி­க­மாக கற்கும் பல்­க­லைக்­க­ழ­க­மாக சப்­ர­க­முவ பல்­க­லைக்­க­ழ­கத்தை அடை­யா­ளப்­ப­டுத்­தலாம். இந்த பல்­க­லையைப் பொறுத்­த­வரை சிங்­கள, தமிழ், முஸ்லிம் மாண­வர்கள் எவ்­வித பேதமும் இன்றி கற்றல் நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்டு வரு­கின்­றனர்.

இந் நிலையில் அனைத்து தரப்­பி­ன­ரையும் அல்­லது இனத்­த­வ­ரையும் உள்­ள­டக்­கிய அந்த பல்­க­லைக்­க­ழ­கத்தின் மாணவர் சங்கம் 8 உள்­ளிட்ட சங்­கங்கள் பலவும் பல்­க­லைக்­க­ழக நிர்­வா­கத்­தி­னரால் தடை செய்­யப்­பட்­டன. இதனை எதிர்த்து அந்த பல்­க­லையின் மாண­வர்கள் செய்து வரும் போராட்­ட­மா­னது 512 நாட்­களை கடந்­துள்ள நிலையிலும் இன்னும் தீர்வு எட்­டப்­ப­ட­வில்லை.

இந் நிலை­யி­லேயே அப்­பல்­க­லையில் கற்ற தமிழ் மாணவன் ஒருவர் மிக மோச­மாக தாக்­கப்­பட்டு, அங்­குள்ள ஏனைய சிறு­பான்மை சமூ­கங்­களை சேர்ந்த மாண­வர்­களின் மனங்கள் அச்சம் கொள்ளும் படி­யாக அல்­லது புதி­தாக மாண­வர்­க­ளுக்குள் பிரச்­சி­னை­களை ஏற்­ப­டுத்தும் வண்ணம் விஷ­மிகள் சிலர் கைகோர்த்­துள்­ள­தாக எண்ண வேண்­டி­யுள்­ளது.

சம்­பவம் யாழ்.முக­மா­லையை சேர்ந்­தவர் சந்­திர குமார் சுதர்ஷன். பல கன­வு­க­ளுடன் யுத்த வடுக்­களை தாண்டி சப்­ர­க­முவ பல்­க­லையில் கல்வி பயில வந்த மாணவன் அவன். இந்த கட்­டுரை நேற்று எழு­தப்­படும் போது அவன் கன­வு­களை சுமந்­த­வ­னாக இரத்­தி­ன­புரி வைத்­தி­ய­சா­லையில் சிகிச்சைப் பெற்­றுக்­கொண்­டி­ருந்தார்.

இதற்கு காரணம் கடந்த மூன்றாம் திகதி அதி­காலை மூன்று மணி­ய­ளவில் இடம்­பெற்ற அந்த சம்­ப­வ­மாகும். சந்­திரகுமார் சுதர்ஷன் பல்­க­லையின் வெளியே உள்ள விடு­தி­யி­லேயே தங்­கி­யி­ருந்து கற்­றலை மேற்­கொண்­டவன். சுதர்ஷன் தங்­கி­யி­ருந்த அந்த விடு­திக்­கட்­டி­டத்­துக்கு பாது­காப்பு உத்­தி­யோ­கத்­தர்கள் கட­மையில் ஈடு­ப­டுத்­தப்­பட்­டுள்­ளார்கள் என்­பது இன்­னு­மொரு விடயம்.

இந் நிலையில் கடந்த இரண்டாம் திகதி இரவு தனது கற்றல் நட­வ­டிக்­கைகளை பூர்த்தி செய்­து­விட்டு வழமை போன்றே சுதர்ஷன் நித்­தி­ரைக்கு சென்­றுள்ளான். அப்­போது நேரம் நள்­ளி­ரவு 12 மணியை அண்­மித்­தி­ருந்­துள்­ளது. நித்­தி­ரை­யி­லி­ருந்து மீண்டும் அதி­காலை 3.00 மணி­ய­ளவில் விழித்­துக்­கொண்­டுள்ள சுதர்ஷன் இயற்கை தேவையை பூர்த்தி செய்­வ­தற்­காக மல­சல கூடத்தை நாடி சென்­றுள்ளார்.

இதன் போது முக மூடி அணிந்த நபர் ஒருவர் சுதர்­ஷனை மறைந்­தி­ருந்து கட்­டிப்­பி­டித்து வாயை அடைக்க, இன்­னு­மொ­ருவர் கட்டை ஒன்­றினால் அம்­மா­ண­வனின் தலையில் அடித்­துள்ளார். இதனை அடுத்து என்ன நடந்­தது என்­பது தனக்கு தெரி­யாது என கூறும் சுதர்ஷன் என்ற அந்த மாணவன் மயக்கம் தெளியும் போது தான் விடு­திக்கு வெளியே காட்­டுப்­பாங்­கான இடத்தில் இருந்­த­தாக குறிப்­பி­டு­கின்றார்.

குறித்த மாண­வனின் கைகால்கள் கட்­டப்­பட்டு உடம்­பெங்கும் வெட்­டுக்­கா­யங்கள் ஏற்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­த­துடன் மாணவன் சத்தம் போட்­டு­விடக் கூடாது என்­ப­தற்­கா­கவோ என்­னவோ வாயில் உள்­ளாடை (பெனியன்) ஒன்று திணிக்­கப்­பட்­டி­ருந்­துள்­ளது. அத்­துடன் தலைப்­ப­குதி உடல் பகுதி என வேறு பாடின்றி மிக மூர்க்­கத்­த­ன­மாக இந்த தாக்­குதல் மேற்­கொள்­ளப்­பட்­டி­ருந்­தது.

மயக்க நிலை­யி­லி­ருந்து மீண்­டுள்ள அந்த மாணவன் பல்­க­லைக்­க­ழக விடுதி நோக்கி வந்து அந்த விடுதி வாயி­லி­லேயே விழுந்­துள்ளான். இதனை அடுத்தே மாணவன் உட­ன­டி­யாக அருகில் உள்ள வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ள­துடன் அங்­கி­ருந்து பலாங்­கொடை வைத்­தி­ய­சா­லைக்கு மாற்­றப்­பட்­டுள்ளார்.

பின்னர் பலாங்­கொடை வைத்­தி­ய­சா­லை­யி­லி­ருந்து மேல­திக சிகிச்­சை­க­ளுக்­காக இரத்­தி­ன­புரி வைத்­தி­ய­சா­லைக்கு மாற்­றப்­பட்ட அந்த மாணவன் நேற்றும் அந்த வைத்­தி­ய­சா­லை­யி­லேயே சிகிச்­சை­களை தங்­கி­யி­ருந்து தொடர்ந்து பெற்று வரு­கின்றார்.

எச்­ச­ரிக்­கை­களும் பின்­ன­ணியும் இந்த தாக்­குதல் சம்­பவம் இடம்­பெற சில வாரங்­க­ளுக்கு முன்னர், அதா­வ­து ­க­டந்த ஜூலை மாதம் 20 ஆம் திக­தி­ய­ளவில் பல்­க­லையின் பண்டா மாணவர் விடு­தியில் அசிங்­க­மான வார்த்­தை­களால் தமிழ், முஸ்லிம் மாணவ மாண­வி­யர்­க­ளுக்கு சுவ­ரொட்­டி­யொன்றின் ஊடாக எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டி­ருந்­த­தாக அறிய முடி­கின்­றது.

குறித்த மாணவர் விடு­தியின் கழிப்­ப­றையில் ஒட்­டப்­பட்­டுள்ள அந்த சுவ­ரொட்­டியில் சிறு­பான்மை இன மாண­வர்­களை உடன் பல்­க­லைக்­க­ழ­கத்தை விட்டு வெளி­யேற உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டி­ருந்­த­தாக கூறப்­ப­டு­கின்­றது.

குறித்த அறி­வித்­தலை மீறி எவ­ரேனும் (தமிழ், முஸ்லிம் மாண­வர்கள்) பல்­க­லையில் இருப்பின் அவர்கள் சுட்­டுக்­கொல்­லப்­ப­டு­வார்கள் எனவும் மாண­விகள் மான­பங்­கப்­ப­டுத்­தப்­ப­டு­வார்கள் எனவும் அந்த சுவ­ரொட்­டியில் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­த­தாக அங்கு கல்வி பயிலும் பல மாண­வர்­களும் எமது கவ­னத்­திற்கு கொண்டு வரு­கின்­றனர்.

அந்த சுவ­ரொட்­டியில் சில மாண­வர்­களின் பெயர்கள் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­த­தா­கவும் கூறப்­ப­டு­கின்­றது. தமிழ் மற்றும் ஆங்­கிலம் கலந்து இந்த வாச­கங்கள் எழு­தப்­பட்­டுள்­ள­துடன் அதில் எழுத்துப் பிழை­களும் காணப்­ப­டு­கின்­றன. இது எங்கள் நாடு, நீங்கள் போய்­வி­டுங்கள், நீங்கள் புலிகள் போன்ற வார்த்­தைகள் அவற்றில் எழு­தப்­பட்­டுள்­ளன. இந் நிலையில் அந்த சுவ­ரொட்­டியை பல்­க­லைக்­க­ழக நிர்­வாகம் பார்த்த பின்­னரும் எவ்­வித நட­வ­டிக்­கையும் அல்­லது உருப்­ப­டி­யான விசா­ர­ணை­களும் முன்­னெ­டுக்­கப்­ப­டாத நிலை­யி­லேயே கடந்த மூன்றாம் திகதி மாணவன் ஒருவன் தாக்­கு­த­லுக்கு உள்­ளா­கிய சம்­பவம் பதி­வா­கி­யுள்­ளது. 

தாக்­குதல் நடத்­தி­ய­வர்கள் 30 முதல் 35 வய­துக்கு உட்­பட்ட தோற்­றத்தை கொண்­ட­வர்கள் எனவும் அவர்­களில் ஒருவர் உடலில் பச்சை குத்­தி­யி­ருந்­த­தா­கவும் அவர்­களைத் தன்னால் அடை­யாளம் காட்ட முடியும் எனவும் தாக்­கு­த­லுக்கு உள்­ளான மாணவர் கூறி­யுள்ளார்.

கடந்த 30 வரு­ட­காலம் போர் நடை­பெற்ற போதிலும் பல்­க­லைக்­க­ழங்­களில் இன­வாத மோதல்கள் ஏற்­ப­ட­வில்லை. அதற்கு மாண­வர்­களும் இட­ம­ளிக்­க­வில்லை. பல்­க­லை­யிலும் புலி வேட்­டையா? தமிழ் மாணவன் ஒருவன் தாக்­கப்­பட்டு ஏனைய சிறு­பான்மை இன மாண­வர்­க­ளுக்கு சுவ­ரொட்­டி­யூ­டாக அச்­சு­றுத்தல் விடுக்­கப்­பட்­டுள்ள நிலையில்,
தமிழ் மாண­வர்­களை விடு­தலை புலி­க­ளாக சித்­தி­ரிக்கும் முயற்­சி­களில் சிலர் ஈடு­பட்­டுள்­ளனர் என்­பதை மட்டும் தெளி­வு­ப­டுத்­திக்­கொண்­டி­ருக்­கின்­றது.

கடந்த மூன்றாம் திகதி தாக்­கு­த­லுக்கு உள்­ளான மாணவன் தொடர்­பி­லான விசா­ர­ணை­களில் சம­னல்­கந்த பொலிஸார் மற்­றொரு தமிழ் மாண­வனை கடந்த ஐந்தாம் திகதி முற்­பகல் வேளையில் பரீட்சை எழு­திக்­கொண்­டி­ருந்த போது கைது செய்­தனர்.

கைது செய்­யப்­பட்ட குறித்த மாணவன் தற்­போது புலி முத்­திரை குத்­தப்­பட்டு பயங்­கர வாத புல­னாய்வுப் பிரி­வி­னரால் கொழும்­புக்கு கொண்­டு­வ­ரப்­பட்டு விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டுள்ளார். வவு­னியா, கன­க­ரா­யன்­குளம், சின்­ன­டம்பன் பகு­தியைச் சேர்ந்த யோக­நாதன் நிரோஜன் (வயது 25) என்­ப­வரே இவ்­வாறு கைது செய்­யப்­பட்­டுள்ளார். 

யோக­நாதன் நிரோஜன் முன்னாள் புலி­களின் உறுப்­பினர் என்­பதை காரணம் காட்­டியே இவ்­வாறு பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரி­வி­ன­ரிடம் விசா­ர­ணை­க­ளுக்­காக கைய­ளிக்­கப்­பட்­டுள்­ள­தாக பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் அலு­வ­ல­கத்தின் சிரேஷ்ட அதி­காரி ஒருவர் குறிப்­பிட்டார். யோக­நாதன் நிரோஜன் புலி­களின் மருத்­துவ பிரிவில் இறு­தி­கட்ட யுத்­தத்தின் போது இருந்­துள்­ளமை உண்மை தான்.

எனினும் பின்னர் யோக­நாதன் நிரோஜன் உள்­ளிட்ட பலரும் புனர் வாழ்­வுக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டனர். 2011/2012 ஆம் ஆண்­டு­களில் புனர்­வாழ்வு முகாமில் இருந்த வாறே பரீட்­சைக்கு தோற்றி பல்­க­லைக்­க­ழகம் நுழைந்­த­வரே இந்த யோக­நாதன் நிரோஜன். தற்­போது சப்­ர­க­முவ பல்­க­லைக்­க­ழ­கத்தில் மூன்றாம் ஆண்டில் கல்வி பயிலும் யோக­நாதன் நிரோஜன் தொடர்பில் இந்த மூன்று ஆண்­டு­களில் எவ்­வித முறைப்­பா­டு­களும் இல்லை.

இவ்­வா­றான நிலையில் பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரி­வி­னரின் கைதா­னது பாரிய சந்­தே­கங்­களை தோற்­று­விக்­கின்­றது. இத­னி­டையே சப்­ர­க­முவ பல்­க­லைக்­க­ழக சிறு­பான்மை இன மாண­வர்­க­ளுக்கு எச்­ச­ரிக்கை விடப்­பட்ட சுவ­ரொட்­டி­களில் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்த விட­யங்­க­ளுக்கும் பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரி­வினர் அந்த மாண­வனின் கைதுக்கு குறிப்­பிடும் கார­ணத்­துக்கும் பெரி­ய­ளவில் வித்­தி­யாசம் இல்லை.

எவ்­வா­றா­யினும் இந்த கைதை பல்­க­லைக்­க­ழ­கத்தில் உள்ள சிங்­கள மாண­வர்­களே எதிர்த்­துள்­ளனர். அவர்கள் இதற்கு எதிர்ப்புத் தெரி­வித்தும் கைது செய்­யப்­பட்ட மாண­வனை உடன் விடு­தலை செய்­யு­மாறு கோரியும் அவர்கள் ஆர்ப்­பாட்டம் ஒன்­றி­னையும் முன்­னெ­டுத்­தி­ருந்­தனர்.

இந்த கைது மற்றும் சப்­ர­க­முவ பல்­க­லைக்­க­ழ­கத்தில் தற்­போது காணப்­படும் நிலை­வரம் குறித்து அனைத்து பல்­க­லைக்­க­ழக மாணவர் ஒன்­றி­யத்தின் செயற்­பாட்­டா­ளர்­களில் ஒருவர் கேச­ரி­யு­ட­னான கலந்­து­ரை­யா­டலில் இவ்­வாறு தெரி­வித்தார். 'சப்­ர­க­முவ பல்­க­லையை பொறுத்த மட்டில் மாண­வர்­க­ளுக்கு மத்­தியில் எவ்­வித இன மத பேதங்­களும் இது வரை இருந்­த­தில்லை. தற்­போது யாரோ, தமது அர­சியல் நோக்­கங்­க­ளுக்­காக இட­ரினை ஏற்­ப­டுத்த முயற்­சிக்­கின்­றனர். அத­னா­லேயே மூன்று வரு­டங்­க­ளாக எம்­முடன் கல்வி பயின்ற சகோ­த­ரரை புலி முத்­திரை குத்­து­கின்­றனர். 

இவர் இங்கு மூன்று வரு­டங்கள் இருந்த நிலையில் கடந்த 5 ஆம் திகதி வரை புலி­யாக தெரி­யா­தது ஏன்?. அத்­துடன் இவரைப் போன்றே புனர்­வாழ்­வ­ளிக்­கப்­பட்ட இன்னும் பல மாண­வர்கள் பல்­க­லைக்­க­ழ­கங்­களில் உள்­ளனர். அவர்­க­ளுக்கும் ஒரு அபாய சமிக்­ஞையை இந்த கைது கொடுத்­துள்­ளது.

செல்லும் போக்கை பார்க்கும் போது பிர­பா­க­ரனின் மக்கள் கூட ஒரு பல்­க­லைக்­க­ழ­கத்­தி­லி­ருந்து கைது செய்­யப்­ப­டலாம். இது மிகப் பயங்­க­ர­மான ஒரு நிலை­மை­யாகும்.' என குறிப்­பிட்டார்.

அச்­சு­றுத்தும் பல்­கலை நிரு­வாகம் இந்த நிலையில் கைது செய்­யப்­பட்ட மாணவன் குறித்து ஆரம்­பத்தில் பொலிஸார் மாண­வர்கள் சங்க உறுப்­பி­னர்­க­ளுக்கோ நண்­பர்­க­ளுக்கோ தகவல் வழங்­காத நிலையில் பல்­கலை நிர்­வா­கத்தை அந்த பல்­கலை மாண­வர்கள் நாடி­யுள்­ளனர்.

கைது செய்­யப்­பட்ட மாணவர் தொடர்பில் அவர் ஏன் கைது செய்­யப்­பட்டார், அவரை பரீட்சை எழுத அனு­ம­திக்க வேண்டும், உட­ன­டி­யாக விடு­தலை செய்ய ஆவன செய்ய வேண்டும் போன்ற கோரிக்­கை­க­ளுடன் பல்­கலை நிர்­வா­கத்தை சந்­தித்த இரு மாண­வர்­களில் அடை­யாள அட்­டைகள் பல்­கலை நிர்­வா­கத்­தினால் பிடுங்­கப்­பட்­டுள்­ள­துடன் அவர்கள் இரு­வரும் அச்­சு­றுத்­தல்­க­ளுக்கும் முகம் கொடுத்­துள்­ளனர்.

இது தொடர்பில் பல்­கலை மாணவர் ஒன்­றியம் எமது கவ­னத்­திற்கு விட­யத்தை கொண்­டு­வந்­தது. தம்­முடன் ஒன்­றாக படிக்கும் மாண­வனின் கைதுக்­கான காரணம் கோரி சென்ற இரு­வரே இவ்­வாறு அச்­சு­றுத்­த­லுக்கு முகம் கொடுத்­துள்­ளனர். மாண­வனை தாக்­கி­யது யார்? இந்த கைது விடயம் ஒரு புற மிருக்க, கடந்த மூன்றாம் திகதி அதி­காலை குறித்த மாண­வனை உண்­மை­யி­லேயே தாக்­கி­யது யார் என்ற கேள்­விக்கு இது வரை விடை­யில்லை.

அது தொடர்­பான விசா­ர­ணை­க­ளி­லேயே இந்த மூன்றாம் வருட மாணவன் சந்­தே­கத்தில் கைது செய்­யப்­பட்­ட­தாக பொலிஸார் சமா­ளிக்க முனைந்­தாலும், சம்­பவம் இடம்­பெற்ற மூன்றாம் திகதி யோக­நாதன் நிரோஜன் சப்­ர­க­முவ பல்­க­லையில் இருக்­கவே இல்லை என்­பது தற்­போது தெரி­ய­வந்­துள்­ளது.

அதா­வது முதலாம் வருட மாணவன் சந்­திர குமார் சுதர்ஷன் தாக்­கு­த­லுக்கு உள்­ளாகும் போது யோக­நாதன் நிரோஜன் விடு­மு­றையில் வவு­னி­யாவில் உள்ள அவ­ரது வீட்­டி­லேயே இருந்­துள்ளார். அவர் மீண்டும் பல்­க­லைக்­க­ழ­கத்­துக்கு நான்காம் திகதி திங்கட் கிழ­மையே சமூ­க­ம­ளித்­துள்ளார்.

இதற்­கான நேரடி சாட்­சி­யங்­க­ளாக அங்­குள்ள பல மாண­வர்கள் உள்­ளனர். இதே­வேளை, கடந்த செவ்­வாய்­க்கி­ழமை பிற்­பகல் குறித்த மாண­வனின் கன­க­ரா­யன்­குளம், சின்­ன­டம்பன் பகு­தியில் உள்ள வீட்­டிற்கு சென்ற புல­னாய்வு துறை­யினர், அவ­ரது விவ­ரங்­களைப் பெற்­றுள்­ளனர்.

எதற்­காக விவரம் எடுக்­கின்­றீர்கள் என கேட்ட போது "எதுவும் வேலை வந்தால் கொடுப்­ப­தற்கு" என்று கூறி­னார்கள் என மாண­வனின் தாயார் தெரி­வித்தார். இப்­ப­டி­யான பின்­ன­ணியில் முதலாம் வருட மாணவர் சுதர்­ஷனை தாக்­கி­யது மிகத்­திட்­ட­மிட்டே என்­பதும் இந்த கைதும் அவ்­வா­றான ஒரு திட்­டத்தின் பின்னால் அரங்­கேற்­றப்­பட்ட நாடகம் என்­ப­தையும் விளங்­கிக்­கொள்ள அவ்­வ­ளவு நேரம் தேவை இல்லை.

எனவே யாரோ ஒரு குழுவின் அல்­லது நபரின் தனிப்­பட்ட தேவைக்­காக அல்­லது பல்­க­லைக்­க­ழ­கத்தின் ஒற்­று­மை­யான நட­வ­டிக்­கை­களை திசை­தி­ருப்பும் நோக்­கத்­து­ட­னேயே இந்த தாக்­கு­தலும் கைதும் இடம்­பெற்­றி­ருக்க வேண்டும் என்­பது அவ­தா­னி­களின் பார்­வை­யாக உள்­ளது.

இத­னி­டையே இந்த கைது விவ­காரம் குறித்து கைது செய்­யப்­பட்ட மாண­வனின் பெற்றோர் மனித உரிமை ஆணைக்­கு­ழுவை நாட தீர்­மா­னித்­துள்­ளனர். இது தொடர்பில் மாண­வனின் தந்­தை­யான எஸ்.யோக­நாதன் தெரி­விக்­கையில், எனது மூத்த மகன் சப்­ர­க­முவ பல்­க­லைக்­க­ழ­கத்தில் சமூக விஞ்­ஞான மற்றும் மொழிகள் துறையில் 3ஆம் வருட மாண­வ­னாக கற்று வரு­கின்றார்.

தனக்கு லீவு எனக் கூறி கடந்த 5 நாட்கள் சின்­ன­டம்­பனில் உள்ள எமது வீட்டில் நின்­று­விட்டு, பரீட்சை இருப்­ப­தாகத் தெரி­வித்து கடந்த சனிக்­கி­ழமை மீண்டும் பல்­க­லைக்­க­ழகம் சென்­றி­ருந்தார். அங்கு பரீட்சை எழுதிக் கொண்­டி­ருந்த பொழுது கடந்த 05.08.2014 அன்று எனது மகனை சிலர் கைது செய்­தனர் என்று தெரி­விக்­கப்­பட்­டது.

இது தொடர்­பாக தக­வ­ல­றிய நேற்று கன­க­ரா­யன்­குளம் பொலிஸ் நிலையம் சென்றோம். அவர்கள் தமக்கு தகவல் கிடைத்­துள்­ளது, எனது மகனை பலாங்­கொட பொலிஸார் கைது செய்து கொழும்பில் தடுத்து வைத்­துள்­ளனர் என்று தெரி­வித்­தனர். இத­னை­ய­டுத்து இன்று வவு­னி­யாவில் உள்ள மனித உரிமை ஆணைக்­கு­ழுவில் முறைப்­பாடு செய்­துள்ளோம்.

தற்போது எனது மகனைத் தேடி கொழும்பு செல்கின்றோம் எனத் தெரிவித்தார். இதனிடையே மேற்படி மாணவனை கைது செய்யும் போது நேரில் கண்ட சக மாணவன் ஒருவன் இவ்வாறு தெரிவித்துள்ளார். “கடந்த 5 ஆம் திகதி அன்று பரீட்சை எழுதிவிட்டு பல்கலைக்கழக வளாகத்தில் நாங்கள் நின்றிருந்தோம்.

அப்போது எமது பல்கலைக்கழத்தைச் சேர்ந்த இந்திக்கா என்ற விரிவுரையாளர், நிரோசனின் பரீட்சை இலக்கத்தை கூறி அவரை வருமாறு அழைத்து, அங்கிருந்து கூட்டிச் சென்றார். இந்த நிலையில் பல மணி நேரங்களுக்கு பின் நிரோஜனை வளாகம் முழுவதும் தேடிய போதும் காணவில்லை.

பின்னர் பல்கலைக்கழக நிர்வாகம் ஊடாக நிரோஜனை பொலிஸார் கைது செய்துள்ளனர் என்று அறிந்து கொண்டோம்” என்றார். இந் நிலையில் மாணவன் சந்திர குமார் சுதர்ஷன் மீதான தாக்குதலும் மாணவன் யோகநாதன் நிரோஜனின் கைதும் மிகத்திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது என நம்புவதற்கு போதுமான காரணிகள் உள்ளன.

அத்துடன் இந்த விடயங்கள் யுத்த வடுவிலிருந்து மீண்ட புனர்வாழ்வு பெற்று சாதாரண வாழ்வை வாழும் அனைவரையும் கிலிகொள்ளச் செய்யும் விடயமாகும். அத்துடன் அவர்களது சாதாரண சிவிலியன் வாழ்வைக் கொச்சைப்படுத்தும் விடயமும் கூட.

எனவே சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்கள் விடயத்தில் நீடிக்கும் பிரச்சினைகளை தீர்க்காது அதனை திசை திருப்ப கல்வி பயிலும் அப்பாவி சிறுபான்மையின மாணவர்களை பலிக்கடாவாக்க எந்த ஒரு தரப்பும் முயலக்கூடாது. அப்படி ஒரு துரதிஷ்டமான சம்பவம் இடம்பெற்றால் நாடு இன்னும் பல வருடங்களுக்கு பின்னோக்கி நகர்த்தப்பட்டு விடும் என்பது மட்டும் நிதர்சனம்.