மோடிக்கே சவால்விடும் மகிந்த அன்கோ -காணொளி
அரசு உத்தரவுகளை வழங்கியிருந்தது என்றும், அண்மையில் இந்தியாவிற்கு அழைத்த கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கு தாம் இனப்பிரச்சனை தீர்வு தொடர்பில் உத்தரவாதங்களை இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி வழங்கியிருப்பதாக செய்திகள் வெளியாகி இரண்டு வாரங்களுக்கு முன்னரே நரேந்திர மோடி அரசிற்கு மகிந்த அன்கோ அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருப்பதாக நோக்கர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
சீன அதிபர் சீ ஜின்பிங் நூறுக்கும் மேற்பட்ட அதிகாரிகள் சகிதம் இரண்டு நாள் விஜயமாக இலங்கை வந்தடைந்தார். இந்தப் பயணத்தின்போது இலங்கையுடன் இருபத்துமூன்று வர்த்தக மற்றும் கூட்டுறவு ஒப்பந்தங்களில் சீன அதிபர் கையொப்பமிடவுள்ளார். சீனாவின் நிதியில் உருவாக்கப்படுகின்ற துறைமுக நகரம் ஒன்றுக்கான பணிகளை துவங்கிவைப்பது என்பதும் இதில் அடங்கும்.
கொழும்பு அருகே கடல் பகுதியில் இருந்து நிலப்பரப்பை மீட்டு இந்த துறைமுகம் அமையும். யுத்தத்துக்கு பின்னரான இலங்கையின் மிகப் பெரிய முதலீட்டாளராக விளங்கிவருகின்ற சீனா, அங்கு நெடுஞ்சாலைகள், ஒரு மின் உற்பத்தி நிலையம், ஒரு விமானம் நிலையம் போன்றவற்றை உருவாக்கி வருகிறது.
“முத்துச் சரம்” என்று வர்ணிக்கப்படுகின்ற இடங்களை இந்தியாவைச் சுற்றிலுமாக ” உருவாக்கி, பிராந்தியத்தில் இந்தியாவின் செல்வாக்கை குறைக்க சீனா முயல்கிறது என்று தெரிவிக்கப்படும் கூற்றுக்களை சீனா மறுத்துவந்துள்ளது.
இருந்தபோதிலும். இலங்கையை ‘அற்புதமான ஒரு முத்து’ என தான் பயணம் கிளம்பும் நேரத்தில் அதிபர் சீ வர்ணித்திருந்தார்.
இன்று இலங்கைக்கு பயணம் மேற்கொண்ட சீன ஜனாதிபதி தலைமையிலான குழுவிற்கு சிங்கள அரசு மிக முக்கியத்துவம் கொடுத்து முன்னெடுத்த வரவேற்பு நிகழ்வினை அரச ஊடகங்கங்கள் காணொலி மூலம் வெளியிட்டுள்ளன.
இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையில் பாதுகாப்பு பலப்படுத்த இணக்கம்- கூட்டுத் திட்டம் வெளியானது
சீனாவும் இலங்கையும் ஒரு நாட்டின் இறைமையில் மற்றும் ஒரு நாடு அல்லது அமைப்பு தலையிடுவதை எதிர்ப்பது என்ற கொள்கையில் இணக்கம் கண்டுள்ளன.
அத்துடன் இரண்டு நாடுகளிலும் அரசியல், சமூக கட்டமைப்பு பிரச்சினைகளுக்கு சமாதானமான தீர்வுகள் விடயத்திலும் ஏனைய நாடுகளின் அமைப்புக்களின் தலையீடுகளை எதிர்ப்பதில் இரண்டு நாடுகளும் இணக்கம் கண்டுள்ளன.
இதேவேளை இலங்கையின் ஒற்றுமை, சமாதானம் மற்றும் நல்லிணக்க விடயங்களில் சீனா ஆதரவை வழங்கும் என்று சீனாவின் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் இரண்டு நாடுகளும் இணைந்து இன்று இணைந்த திட்டம் ஒன்றையும் வெளியிட்டுள்ளன.
இதன்படி இன்று இலங்கைக்கு வந்த சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங், இலங்கையின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, பிரதமர் உட்பட்டவர்களை சந்தித்து உரையாடியுள்ளார்.
இதன்போது பொருளாதார, தொழில்நுட்ப மற்றும் கலாச்சார ரீதியான இணக்கங்கள் எட்டப்பட்டன.
அத்துடன் சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான சுதந்திர வர்த்தக உடன்பாடு தொடர்பான ஆரம்ப ஆய்வுகள் தொடர்பில் இரண்டு நாடுகளும் திருப்தியை வெளியிட்டுள்ளன.
இதேவேளை, நுவன்புர அதிவேக பாதை, வடக்கு அதிவேக பாதை, ஜின் நிலவள ஆறு திசை திருப்பல், தேசிய விமான நிலையங்களின் புனரமைப்பு, பெற்றோலிய சுத்திகரிப்பு உட்பட்ட திட்டங்களுக்கு நிதியுதவியை சீனா அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளது.
இரண்டு நாடுகளும் கரையோரப் பாதுகாப்பில் ஒத்துழைப்பு, ஆராய்ச்சியும் காப்பாற்றுதலும் கடல் பாதுகாப்பு போன்ற விடயங்களிலும் இணக்கங்களை கண்டுள்ளன. அத்துடன் இரண்டு நாடுகளும் பாதுகாப்பு ஒத்துழைப்புகளை பலப்படுத்த இணங்கியுள்ளன.
இதன்படி இராணுவப் பயிற்சிகள், அதிகாரி பயிற்சிகள், விஞ்ஞான உதவிகள், பயங்கரவாதத்துக்கு எதிரான தாக்குதல்கள் போன்றவற்றை ஒரு திட்டத்துக்குள் மேற்கொள்ள இரண்டு நாடுகளும் இணங்கியுள்ளன.














