பலத்த பாதுகாப்பின் மத்தியிலும் யாழ் பல்கலைக்கழகத்தில் மாவீரர் நாள் நிகழ்வுகள் - THAMILKINGDOM பலத்த பாதுகாப்பின் மத்தியிலும் யாழ் பல்கலைக்கழகத்தில் மாவீரர் நாள் நிகழ்வுகள் - THAMILKINGDOM
 • Latest News

  பலத்த பாதுகாப்பின் மத்தியிலும் யாழ் பல்கலைக்கழகத்தில் மாவீரர் நாள் நிகழ்வுகள்


  அச்சுறுத்தல்கள் அனைத்தையும் தாண்டி யாழ்.பல்கலைக்கழகத்தில் மாவீரர்நாள் அனுஸ்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

  இன்றைய தினம் பல்கலை வளாகத்தில் அமைந்துள்ள நினைவுத் தூபிக்கு முன்னால் மாணவர்களால் சுடர் ஏற்றுவார்கள் என்று படையினரும்,பொலிஸாரும் காத்திருந்த வேளை பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள மாணவர் பொது அறையில் சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
  யாழ்.பல்கலைக்கழக சூழலில் இராணுவம், பொலிஸார் மற்றும் புலனாய்வாளர்களும் குவிக்கப்பட்டு பதட்டம் நிலவுகின்ற நிலையிலும் மண்ணுக்காக உயிர்த்தியாகம் செய்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

  இதேவேளை மாலை பல்கலைக்கழக வளாகத்திற்கு வரும் மாணவர்கள், உத்தியோகத்தர்களை சோதனை செய்த பின்னரே பல்கலைக்கழகத்திற்கு செல்ல அனுமதித்து வருகின்ற நிலையில். பத்துக்கு அதிகமான மாணவர்கள் இன்று மாலை பல்கலைக்கழகத்திற்குள் புகுந்து மாவீரர் சுடரை ஏற்றிவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

  யாழ்.பல்கலைக்கழக சுற்றாடலில் படையினர் மற்றும் படைப் புலனாய்வாளர்களின் கடுமையான அச்சுறுத்தல்கள் மற்றும் அடாவடிகளுக்கும் மத்தியில் யாழ்.பல்கலைக் கழகத்தில் மாவீரர் நினைவாக ஈகை சுடர் ஏற்றி மாணவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
  பல்கலைக்கழக செல்வநாயகம் மண்டபத்திற்கு முன்பாக குறித்த ஈகை சுடர் ஏற்றி வைக்கப்பட்டது. வெளியே வீதியிலும், பல்கலைக்கழக வளாகத்திற்குள்ளும் படை யினர் நிறைந்திருந்த நிலையில் எதுவும் இவ்வருடம் சாத்தியமில்லை. என நம்பப்பட்ட நிலையில் மாணவர்கள் குறித்த நிகழ்வை நடத்தியிருக்கின்றனர்.
  இதனையடுத்து ஆத்திரமுற்ற நிலையில் படையினர் பல்கலைக்கழக சுற்றாடலில் நின்று கொண்டிருப்பதாக தெரியவருகின்றது.
  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: பலத்த பாதுகாப்பின் மத்தியிலும் யாழ் பல்கலைக்கழகத்தில் மாவீரர் நாள் நிகழ்வுகள் Rating: 5 Reviewed By: Bagalavan
  Scroll to Top