ஏமாற்றினார் கெய்ல்! படுதோல்வியடைந்தது மேற்கிந்திய அணி - THAMILKINGDOM ஏமாற்றினார் கெய்ல்! படுதோல்வியடைந்தது மேற்கிந்திய அணி - THAMILKINGDOM
 • Latest News

  ஏமாற்றினார் கெய்ல்! படுதோல்வியடைந்தது மேற்கிந்திய அணி

  உலகக் கிண்ண தொடரில் தென்னாபிரிக்கா மற்றும் மேற்கிந்திய அணிகளுக்கிடையில் சிட்னியில் இன்று நடைபெற்ற போட்டியில் தென்னாபிரிக்க அணி 257 ஓட்டங்களால் வெற்றியடைந்தது.


  போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 408 ஓட்டங்களை பெற்றது .தென்னாபிரிக்கா அணி சார்பில் அதிரடியாக விளையாடிய ஏ.பி டி விலியர்ஸ் 66 பந்துகளில் 162 ஓட்ட த்தைப் பெற்றார். இதில் 17, நான்கு ஓட்டங்களும் , 8 , ஆறு ஓட்டங்களும் அடங்குகிறது. இவரைத்தவிர அம்லா 65 ஓட்டங்களையும், டு பிளசிஸ் 62 ஓட்டங்களையும், ரொசௌவ் 61 ஓட்டங்களையும் பெற்றனர்.

  மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சாளர்களால் இப்போட்டியில் பெரிதாக சோபிக்க முடியாமல் போனது. இதனைத் தொடர்ந்து 409 ஓட்டங்களை வெற்றியிலக்காக க் கொண்டு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய அணி 33.1 ஓவரில் 151 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. மேற்கிந்திய தீவுகள் சார்பில் அணித்தலைவர் ஹோட்லர் 56 ஓட்டங்களைப் பெற்றார்.

  தென்னாபிரிக்க அணி சார்பில் இம்ரான் தாஹிர் 5 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். தென்னாபிரிக்காவுக்கு தகுந்த பதிலடி கொடுப்பார் என எதிர்ப்பார்க்கப்பட்ட கெய்ல் 3 ஓட்டங்களுக்கு விக்கெட்டை பறிகொடுத்தார். ஆட்டநாயகனாக ஏ.பி. டி. விலியர்ஸ் தெரிவானார்.
  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: ஏமாற்றினார் கெய்ல்! படுதோல்வியடைந்தது மேற்கிந்திய அணி Rating: 5 Reviewed By: Unknown
  Scroll to Top