சாமியாராகப் போகிறார் மஹிந்த! - THAMILKINGDOM சாமியாராகப் போகிறார் மஹிந்த! - THAMILKINGDOM
 • Latest News

  சாமியாராகப் போகிறார் மஹிந்த!

  இலங்கையின்  முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ச தற்போது வெளியிடங்களுக்கு செல்வதை குறைத்து வருவதாக தெரிவிக் கப்படுகின்றது.


  அண்மையில் மகிந்தவுக்கா ஆதரவு திரட்டும் நுகேகொட நிகழ்விலும் கூட பங்கேற்கவில்லை.ஆனால் தற்போது சில நாட்களாக ஆலயங்களுக்கு சென்று  தரிசித்து வருகின்றார். அது மட்டுமல்லாது தனது வீட்டுக்கு வருகை தரும் ஆதரவாளர்களை ஆசீர்வதித்து அனுப்புகிறார்.இதனால் அவரை சந்தித்து ஆசீர்வாதம் பெற்றுக் கொள்வதற்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஒவ்வொரு நாளும் காத்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

  அது மட்டுமல்லாது நேற்றுக் காலை சிலாபம் முன்­னேஸ்­வரம் கோயிலுக்கு சென்­று வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார். கோயில் பூச­க­ரிடம் ஆசிர்­வாதமும் பெற்­றுக்­கொண்­டார். அவருடன் மனைவி ஷிரந்தி ராஜ­பக்ச மற்றும் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் நாமல் ராஜ­பக்சவும் கோயிலுக்கு சென்றுள்ளனர்.

  ஆட்சியை இழந்த பின்னர், இப்பொழுது ராஜபக்ச இரண்டு இடங்களிற்குத்தான் சென்று கொண்டிருக்கிறார். குற்றச்செயல்களுடன் தொடர்பட்டு சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டிருக்கும் நண்பர்களை  பார்க்க சிறைச்சாலைகளிற்கும், ஆலயங்களிற்கும்தான் சென்று கொண்டிருக்கிறார். அண்மையில் கதிர்காமம் முருகன் ஆலயத்திற்கு சென்று தங்கமுலாம் பூசப்பட்ட வேல் ஒன்றை காணிக்கையாக செலுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: சாமியாராகப் போகிறார் மஹிந்த! Rating: 5 Reviewed By: Unknown
  Scroll to Top