வடக்கு அமைச்சர்களுடன் வெளிநாட்டு தூதுவர்கள் சந்திப்பு (படங்கள் இணைப்பு) - THAMILKINGDOM வடக்கு அமைச்சர்களுடன் வெளிநாட்டு தூதுவர்கள் சந்திப்பு (படங்கள் இணைப்பு) - THAMILKINGDOM
 • Latest News

  வடக்கு அமைச்சர்களுடன் வெளிநாட்டு தூதுவர்கள் சந்திப்பு (படங்கள் இணைப்பு)

  வெளிநாடுகளுக்கான இலங்கைத்தூதுவர்கள் 30 பேர் அடங்கிய குழுவினர், வடமாகாண அமைச் சர்களைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.

  இன்று வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் கேட்போர் கூடத்தில் இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

  வெளிநாடுகளுக்கு இலங்கைக்கான தூதுவர்களாக புதிதாக நியமிக்கப்பட்டவர்களும், ஏற்கனவே வெளிநாடுகளில் துணைத் தூதுவர்களாகப் பணியாற்றி, தூதுவர்களாக வேறு நாடுகளுக்கு இடம்மாறிச் செல்ல இருப்பவர்களும் வடக்கு மாகாணத்தின் தற்போதைய நிலைபற்றித் தெரிந்து கொள்வதற்காக பல்வேறு தரப்பினரையும் சந்தித்து வருகின்றனர்.

  இதன் ஒரு கட்டமாகவே வடக்கு அமைச்சர்களையும் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.

  பதில் முதலமைச்சரும் கல்வி அமைச்சருமாகிய த. குருகுலராசா தலைமையில் சுகாதார அமைச்சர் ப. சத்தியலிங்கம், விவசாய அமைச்சர் பொ. ஐங்கரநேசன் ஆகியோருடன் வடமாகாணசபை உறுப்பினர் கேசவன் சயந்தன், மற்றும் சுகாதார அமைச்சின் செயலாளர் சி. திருவாகரன், முதலமைச்சரின் செயலாளர் இ.வரதீஸ்வரன் ஆகியோர் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: வடக்கு அமைச்சர்களுடன் வெளிநாட்டு தூதுவர்கள் சந்திப்பு (படங்கள் இணைப்பு) Rating: 5 Reviewed By: Unknown
  Scroll to Top