அனந்தியின் கருத்தை மறுக்கிறார் கனிமொழி! - THAMILKINGDOM அனந்தியின் கருத்தை மறுக்கிறார் கனிமொழி! - THAMILKINGDOM

 • Latest News

  அனந்தியின் கருத்தை மறுக்கிறார் கனிமொழி!

  தமிழீழ விடுதலைப் புலிகளின் பிராந்திய தலைவர்களில் ஒருவராகவிருந்த எழிலனையோ வேறு எந்த உறுப்பினர்களயோ இலங்கை இராணுவத்தினரிடம் சரணடையுமாறு நாம் உறுதிமொழி வழங்கவில்லை.இவ்வாறு தெரிவித்தி ருக்கிறார் திமுக தலைவர் மு.கருணாநிதியின் மகளும் அந்தக்கட்சியின் நாடாளுமன்ற உறுபினருமான கனிமொழி. 

  முல்லைத்தீவு நீதிமன்றத்தில் நடைபெற்ற ஆட்கொணர்வு மனு மீதான விசாரணையின்போது வடக்கு மாகாண சபை உறுப்பினரும் முன்னாள் திருகோணமலை மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளராக இருந்த எழிலலின் மனைவியுமான அனந்தி சசிதரன் வாக்குமூலம் அளனித்திருந்தார். அவர் தனது வாக்குமூலத்தில், 'தனது கணவர் எழிலன், இலங்கை இராணுவத்தினரிடம் சரணடைவதற்கு தீர்மானம் எடுக்க முன்னர், செய்மதி தொலைபேசி மூலம் கனிமொழியுடன் உரையாடினார் என்று தெரிவித்திருந்தார். 

  இதன் பின்னர் ஊடகங்களிலும் குறித்த செய்தி வெளியானது. இந்த நிலையில், அனந்தியின் கருத்தை மறுத்துள்ள கனிமொழி, 'எனக்கு சசிதரன் யார் என்றே தெரியாது. ஏனென்றால், அவர் எல்.ரீ.ரீ.ஈ.யின் முன்னணி தலைவர்களில் ஒருவர். செய்மதி தொலைபேசி மூலம் அவருக்கு ஆலோசனை கூறியதாகச் சொல்வது முற்றுமுழுதிலும் தவறானது. யுத்தம் அதி உச்சகட்டத்தில் இருக்கும் போது, ஒருவரை இலங்கை இராணுவத்திடம் சரணடையும்படி யாராவது கூறுவார்களா?' எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: அனந்தியின் கருத்தை மறுக்கிறார் கனிமொழி! Rating: 5 Reviewed By: Unknown
  Scroll to Top