கொழும்பு கொட்டாஞ்சேனை புளுமென்டல் பகுதியில் தேர்தல் பிரசார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த அமைச்சர் ரவி கருணாயக்கவின் ஆதரவாளர்கள் சிலர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது.
சம்பவத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் காயமடைந்த 11 பேர் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் அனில் ஜாசிங்க கூறுகின்றார்.
நவீன ரக காரொன்றில் வருகைதந்த சிலர் இன்று முற்பகல 11.45 அளவில் தேர்தல் பிரசார நடவடிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்தவர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.இதன் பின்னர் அவர்கள் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.