Breaking News

மனித உரிமை மீறல் தொடர்­பி­லான விசா­ர­ணைகளை 1983 ஆம் ஆண்­டி­லி­ருந்து ஆரம்­பிக்க வேண்டும்!

யுத்த காலத்தில் இடம் பெற்ற மனித உரிமை மீறல் தொடர்பில் உண்­மை­களை கண்­டு­பி­டிக்கும் நட­வ­டிக்கை 1983 ஆம் ஆண்டிலிருந்து ஆரம்­பிக்­கப்­ப­ட­வேண்­டு­மென மக்கள் சேவைக் கட்­சியின் தலைவர் சோம­வன்ச அம­ர­சிங்க அர­சாங்­கத்­திடம் வேண்­டுகோள் விடுத்­துள்ளார்.

கொழும்பில் நேற்று வியா­ழக்­கி­ழமை இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்­பின்­போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது,

இலங்­கையில் இடம்­பெற்­ற­தாக கூறப்­படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் மனித குலத்­திற்கு எதி­ராக மேற்­கொள்­ளப்­பட்­டுள்ள குற்­றங்கள் குறித்த உள்­ளக விசா­ர­ணைகள் வர­வேற்கத்தக்­கது.

இந்­நி­லையில் தற்­போ­தைய அர­சாங்கம் யுத்தக் குற்றம் தொடர்­பி­லான உள்­ளக விசா­ர­ணை­களை சிறந்த வகையில் முன் னெடுத்தாலும் அவை 1983 ஆம் ஆண்­டி­லி­ருந்து இடம்­பெற்ற குற்­றங்கள் தொடர்­பாக விசா­ர­ணைகள் மேற்­கொள்­ளப்­ப­ட­வேண்டும்.

ஜெனிவா தீர்­மா­னத்­திற்கு அமைய இலங்கை அர­சாங்கம் சர்­வ­தேச பிர­தி­நி­தி­களின் பங்­க­ளிப்­புடன், உள்­நாட்டு பொறி­மு­றை­யி­லான விசா­ர­ணை­யொன்றை ஆரம் பிக்க நடவடிக்கை எடுத்து வருகின்ற நிலையில் அரசாங்கம் இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம் என்றார்.