Breaking News

துரோகி சுமந்திரனே வெளியேறு! அவுஸ்திரேலியாவிலும் மூக்குடைபட்டார் சுமந்திரன்!(காணொளி)

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஊடாக நாடாளுமன்ற
அங்கத்துவம் பெற்ற சுமந்திரன் இனவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றமைக்கு மக்கள் மத்தியில் பலத்த எதிர்ப்பு அலைகள் எழுந்துவருகின்ற நிலையில் அவுஸ்திரேலியாவில் ஒன்றுகூடல் ஒன்றில் மக்களின் கேள்விகளால் திண்டாடிய சம்பவம் ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது.

அவுஸ்திரேலியாவில் மக்கள் சந்திப்பு ஒன்றுக்காக அவுஸ்திரேலியாவில் உள்ள தமிழரசுக்கட்சிக் கிளையினரால் சுமந்திரன் அவுஸ்திரேலியாவுக்கு அழைக்கப்பட்டிருந்தார். கூட்டம் நடைபெறத் தொடங்கிய நேரத்திலிருந்து தமிழ் மக்களுக்கு எதிரான நடவடிக்கையில் சுமந்திரன் ஈடுபட்டுவருகின்றமை தொடர்பிலான தொடர் கேள்விகளை மக்கள் எழுப்பினர். 

இதன் போது அங்கிருந்த தமிழரசுக்கட்சியின் ஆதரவாளர்கள் சுமந்திரனுக்கு எதிராக கேள்வி கேட்ட மக்களை கட்டுப்படுத்துவதற்காக கடும் வார்த்தைப் பிரயோகங்களை மேற்கொண்ட நிலையில் நிலைமை கட்டுக்கடங்காமல் சென்றது. சம்வத்தினை அடுத்து ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஒன்று கூடல் தொடரமுடியாத அளவிற்கு இடம் அமளி துமளிப்பட்டது. 

அதன் பின்னர் அவுஸ்திரேலியப்பொலிஸாரை வரவழைத்த தமிழரசுக்கட்சியின் ஆதரவாளர்கள்.. தமிழ் உணர்வாளர்களை அங்கிருந்து வெளியேற்றினர். அதன் பின்னர் பத்திற்கு உட்பட்டவர்களுடன் சுமந்திரன் தம்பதிகளின் ஒன்றுகூடல் நடைபெற்றதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.




இரண்டாம் இணைப்பு-

முஸ்லிம் மக்களே முஸ்லிம் மக்களின் வெளியேற்றத்தை இனச்சுத்திகரிப்பு எனச்சொல்லாதபோது வேண்டுமென்றே சுமந்திரன் அதனை இனச்சுத்திகரிப்பு என்றும் தமிழ் மக்களுக்கு எதிராக நடைபெற்றது இனவழிப்பு எனச்சொல்வதற்கு ஆதாரங்கள் போதாது என தெரிவித்து வந்த நிலையிலேயே இவ்வெதிர்ப்பு நடைபெற்றது. 

இக்கூட்டத்தில் சுமந்திரன் தெரிவித்த கருத்துக்கள்: 

செம்மணியில் மக்கள் கொன்று குவிக்கப்பட்டால் கியுபாவில் விசாரணை நடத்தமுடியாது என்றும் அதனாலேயே தான் உள்ளக பொறிமுறையை வலியுறுத்தி வருவதாகவும் அதுவே நடைபெறும் எனவும் அவர் தெரிவித்தார். அடுத்த வருடத்திற்கு தமிழர்களுக்கான தீர்வு கிடைக்காவிட்டால் தாங்களாகவே அரசியலிலிருந்து விலகிவிடுவோம் எனவும் தெரிவித்தார். 

இதுபோல தான் முன்னரும் தமிழ்நாடு சென்று முன்னைய அரசியல்வாதிகள் தஞ்சமடைந்தார்கள் எனவும் மக்கள் திருப்பி கேட்டனர். 

வடமாகாணசபையானது மக்களுடைய பிரச்சனைகளை கவனிக்காமல் அரசியல் சம்பந்தப்பட்ட 230 தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளதாகவும் ஆனால் வடமாகாணசபை செய்யவேண்டிய வேலைத்திட்டமாக ஒரு வேலைத்திட்டத்தையே இதுவரை செய்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். 

கட்சிக்கு மாறான நிலைப்பாடுகளை எடுத்தபோது கூட்டமைப்பின் இளைஞரணி செயலாளரையும் மகளிரணி செயலாளரையும் கட்சியிலிருந்து நீக்கி நடவடிக்கை எடுத்தது போல விக்கினேஸ்வரன் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் தான் தொடர்ந்து அழுத்தம் கொடுத்துவருவதாகவும் சுமந்திரன் தெரிவித்தார்.