புங்குடுதீவு கடலில் கவிழ்ந்த அம்புலன்ஸ் படகு - THAMILKINGDOM புங்குடுதீவு கடலில் கவிழ்ந்த அம்புலன்ஸ் படகு - THAMILKINGDOM
 • Latest News

  புங்குடுதீவு கடலில் கவிழ்ந்த அம்புலன்ஸ் படகு

  வடமாகாண சுகாதார அமைச்சினால் யாழ்ப்பாணம் புங்குடுதீவு-அனலைதீவிற்கிடையில் நோயா ளர்களின் பயன்பாட்டிற்காக வழங்கப் பட்டடிருந்த அம்புலன்ஸ் படகு கடலில் மூழ்கியுள்ளது.

  இன்று (செவ்வாய்க்கிழமை) காலை கடலில் வீசிய கடும் காற்று மற்றும் அதனால் ஏற்பட்ட கடல் கொந்தளிப்பினால் இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

  யாழ். மற்றும் அனலைதீவிற்கு இடையே இடம்பெறும் போக்குவரத்தினால் நோயாளர்கள் எதிர்நோக்கும் அசௌகரியங்கள் தொடர்பில் சுட்டிக்காட்டப்பட்டதையடுத்து, குறித்த படகு சுகாதார அமைச்சினால் வட மாகாணசபைக்கு வழங்கப்பட்டிருந்து.

  இந்நிலையில், குறித்த படகு விபத்திற்குள்ளானதால் இத்தீவிற்கான நோயாளர் படகு சேவை பாதிப்படைந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: புங்குடுதீவு கடலில் கவிழ்ந்த அம்புலன்ஸ் படகு Rating: 5 Reviewed By: Unknown
  Scroll to Top