‎வலி வடக்கில்‬ விடுவிக்கப்படும் காணிகளை இனங்காணச் செல்கின்றனர் அரச அதிபர் குழுவினர் - THAMILKINGDOM ‎வலி வடக்கில்‬ விடுவிக்கப்படும் காணிகளை இனங்காணச் செல்கின்றனர் அரச அதிபர் குழுவினர் - THAMILKINGDOM
 • Latest News

  ‎வலி வடக்கில்‬ விடுவிக்கப்படும் காணிகளை இனங்காணச் செல்கின்றனர் அரச அதிபர் குழுவினர்

  வலி.வடக்குப் பகுதியில் தைப்பொங்கலுக்கு முன்பாக விடுவிக்கப்படவுள்ள காணிகளை இனம்காணும் பணிக்காக அதிகாரிகள் குழு இன்று செவ்வாய்க்கிழமை குறித்த பிரதேசங்களுக்கு நேரில் செல்லவுள்ளதாக யார்.அரசாங்க அதிபர் நா.வேதநாயகம் தெரிவித்துள்ளார்.

  இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில். 

  வலி.வடக்குப் பகுதியில் இராணுவத்தினர் வசம் உள்ள காணிகளில் குறிப்பிட்ட அளவு காணிகளை விடுவிப்பது தொடர்பாக நேற்று ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் தலைமையில் கலந்துரையாடல் இடம்பெற்றது.

  இந்தக் கலந்துரையாடலின் பிரகாரம் வலி.வடக்கில் மேலும் 700 ஏக்கர் காணி தைப்பொங்கலுக்கு முன்பாக விடுவிக்கப்படும் காணிகளை இனம்காணும் பணிக்காக மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலக அதிகாரிகள் குழு இன்று நேரில் சென்று பார்வையிடவுள்ளனர்.

  நேற்றைய கூட்டத்தில் செயலாளர் மாவட்ட அரச அதிபர் மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் இராணுவத் தளபதி மற்றும் ஆளுநரின் செயலாளர் ஆகியோர் பங்கு கொண்டனர்.
  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: ‎வலி வடக்கில்‬ விடுவிக்கப்படும் காணிகளை இனங்காணச் செல்கின்றனர் அரச அதிபர் குழுவினர் Rating: 5 Reviewed By: Unknown
  Scroll to Top