பெப்­ர­வ­ரியில் இலங்கை வரு­கிறார் மனித உரிமை ஆணை­யாளர் - THAMILKINGDOM பெப்­ர­வ­ரியில் இலங்கை வரு­கிறார் மனித உரிமை ஆணை­யாளர் - THAMILKINGDOM
 • Latest News

  பெப்­ர­வ­ரியில் இலங்கை வரு­கிறார் மனித உரிமை ஆணை­யாளர்

  ஐக்­கிய நாடுகள் மனித உரிமை ஆணை­யாளர் செய்ட் அல் ஹுசேன் அடுத்த வருடம் பெப்­ர­வரி மாத­மளவில் இலங்­கைக்கு விஜயம் மேற்­கொள்­ள­வுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­
  கின்­றது. இந்த விஜ­யத்­தின் ­போது அவர் அர­சாங்க தரப்பின் முக்­கி­யஸ்­தர்­களை சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­த­வுள்­ள­துடன் வட பகு­திக்கு விஜயம் செய்­ய­வுள்­ள­தாக தக­வல்கள் தெரி­வித்­தன. அத்­துடன் வடக்கு விஜ­யத்­தின்­போது வட மாகாண முத­ல­மைச்சர் சி.வி. விக்­கி­னேஸ்­வ­ர­னையும் சந்­தித்து ஐக்­கிய நாடு கள் மனித உரிமை ஆணை­யாளர் செய்ட் அல் ஹுசேன் பேச்­சு­வார்த்தை நடத்­த­வுள்ளார்.

  விசே­ட­மாக அர­சாங்­கத்­தினால் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்ள உள்­ளக விசா­ரணை பொறி­முறைக் கட்­ட­மைப்பில் வட மாகா­ணத்தின் பங்­க­ளிப்பு முக்­கி­யத்­து­வ­மிக்­க­தாக உள்­ளதால் இந்த சந்­திப்பு நிச்­சயம் இடம்­பெறும் என தெரி­ய­வ­ரு­கின்­றது. இதே­வேளை முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்ள உள்­ளக விசா­ரணை பொறி­முறைக் கட்­ட­மைப்பு குறித்த செயற்­பா­டு­களை மதிப்­பீடு செய்­வதும் அது தொடர்­பாக ஆராய்ந்து பார்ப்­ப­துமே செய்ட் அல் ஹுசேனின் இலங்கை விஜ­யத்தின் முக்­கிய நோக்­க­மா­க­வுள்­ளது. கடந்த ஜன­வரி மாதம் எட்டாம் திகதி நாட்டில் இடம்­பெற்ற ஆட்சி மாற்­றத்தின் பின்னர் இலங்கை அர­சாங்கம் ஐக்­கிய நாடுகள் மனித உரிமை ஆணை­யா­ளரை இலங்கை வரு­மாறு அழைப்பு விடுத்­தி­ருந்­தது. கடந்த வருடம் ஜூன் மாதம் ஜெனி­வாவில் இடம்­பெற்ற ஐக்­கிய நாடு­களின் மனித உரிமை பேர­வையின் 29 ஆவது கூட்டத் தொடரில் உரை­யாற்­றிய வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர செய்ட் அல் ஹுசேனை இலங்­கைக்கு விஜயம் மேற்­கொள்­ளு­மாறு நேர­டி­யாக அழைப்பு விடுத்­தி­ருந்தார். 

  இந்­நி­லையில் எதிர்­வரும் 2016 ஆம் ஆண்டு பெப்­ர­வரி மாதம் இலங்­கைக்கு வரு­வ­தற்கு ஐக்­கிய நாடுகள் மனித உரிமை ஆணை­யாளர் இணங்­கி­யி­ருந்­த­தாக கூறப்­பட்­டது. அந்­த­வ­கை­யி­லேயே அடுத்த வருடம் பெப்­ர­வரி மாதம் அல் ஹுசேன் இலங்கை வர­வுள்­ள­தாக தெரி­ய­வ­ரு­கின்­றது.

  ஐக்கிய நாடுகளின் முன்னாள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளை கடந்த 2013 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: பெப்­ர­வ­ரியில் இலங்கை வரு­கிறார் மனித உரிமை ஆணை­யாளர் Rating: 5 Reviewed By: Tamilkingdom
  Scroll to Top