ஹரிஷ்ணவி கொலை குடும்பஸ்தர் கைது - THAMILKINGDOM ஹரிஷ்ணவி கொலை குடும்பஸ்தர் கைது - THAMILKINGDOM
 • Latest News

  ஹரிஷ்ணவி கொலை குடும்பஸ்தர் கைது

  படு­கொலை செய்­யப்­பட்டு வவு­னியா, உக்­கு­ளாங்­குளம்,3 ஆம் ஒழுங்­கையில் உள்ள வீடு ஒன்றில் இருந்து தூக்கில் தொங்­கிய நிலையில் சட­ல­மாக மீட்­கப்­பட்ட 14 வயது மாண­வியின் கொலை தொடர்பில் ஒருவர் நேற்று கைது செய்­யப்பட்­டுள்ளார்.

  மாண­வியின் அயல் வீட்டில் வசித்து வந்­த­வ­ரான 35 வய­து­டைய பால­சிங்கம் ஜனர்தன் என்ற குடும்­பஸ்­தரே விசா­ர­ணை­க­ளுக்­காக சந்­தே­கத்தின் பேரில் கைது செய்­யப்ப்ட்­டுள்­ள­தாக பொலிஸ் பேச்­சாளர் உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் ருவன் குண­சே­கர கேச­ரி­யிடம் உறு­திப்­ப­டுத்­தினார்.

  கைது செய்­யப்­பட்ட சந்­தேக நபரை டி.என்.ஏ.பரி­சோ­த­னைக்கு உட்­ப­டுத்தி அதன் ஊடாக நட­வ­டிக்கை எடுக்க பொலிஸார் எதிர்ப்­பார்ப்­ப­தா­கவும் அவர் மேலும் தெரி­வித்தார். டி.என்.ஏ. சோத­னை­களை முன்­னெ­டுக்க தேவை­யான மூலக் கூறுகள் சாட்­சி­யாக ஏற்­க­னவே பெறப்­பட்­டுள்ள நிலையில் இந்த சோத­னை­களை மேற்­கொள்ள முடிவு செய்­யப்­பட்­ட­தாக பொலிஸ் பேச்­சாளர் மேலும் தெரி­வித்தார்.

  வவு­னியா விபு­லா­னந்தா கல்­லூரி மாணவி கெ.ஹரிஸ்­ணவி (வயது 14) கடந்த செவ்­வாய்­கி­ழமை (16) தனது வீட்டில் தூக்கில் தொங்­கி­யி­ருந்த நிலையில் சட­ல­மாக பிற்­பகல் 2.15 மணி­ய­ளவில் மீட்­கப்­பட்டார். தாயார் தொழி­லுக்கும் சகோ­த­ரர்கள் பாட­சா­லைக்கும் சென்­றி­ருந்த நிலையில் தனி­மையில் இருந்த மாணவி 2.15 மணி­ய­ளவில் தாயார், சகோ­தா­ரர்கள் பாட­சாலை முடிந்து வந்த போது தூக்கில் தொங்­கிய நிலையில் சட­ல­மாக இருப்­பது அவ­தா­னிக்­கப்­பட்­டதன் பின்னர் இவ்­வாறு மீட்­கப்­பட்டார்.

  இந் நிலையில் வவு­னியா பொலிஸ் நிலை­யத்தின் குற்றவியல் பிரிவினர் முன்னெடுத்த சிறப்பு விசாரணைகளிலேயே சந்தேகத்தின் நேற்று சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: ஹரிஷ்ணவி கொலை குடும்பஸ்தர் கைது Rating: 5 Reviewed By: Tamilkingdom
  Scroll to Top