எகிப்து விமான கடத்தல் ஒரு பயங்கரவாத செயற்பாடு அல்ல என தகவல்! (2ம் இணைப்பு) - THAMILKINGDOM எகிப்து விமான கடத்தல் ஒரு பயங்கரவாத செயற்பாடு அல்ல என தகவல்! (2ம் இணைப்பு) - THAMILKINGDOM
 • Latest News

  எகிப்து விமான கடத்தல் ஒரு பயங்கரவாத செயற்பாடு அல்ல என தகவல்! (2ம் இணைப்பு)

  கடத்தப்பட்ட எகிப்து ஏயார் விமானத்தில் பயணித்த பயணிகளில் அநேகமானவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

  தாம் வெடி குண்டு பட்டியை உடலில் அணிந்திருப்பதாக பயணியொருவர் தெரிவித்ததை அடுத்து பயணத்தை ஆரம்பித்த விமானம், சைப்பிரஸ்சின் லானக்க விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டிருந்தது.

  இந்த நிலையில் எகிப்துஏயார் விமானம் கடத்தப்பட்டமை பயங்கரவாத நடவடிக்கை அல்லவெனவும் எகிப்து வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

  எகிப்தைச் சேர்ந்த அமெரிக்க பிரஜையொருவரே இந்த விமானத்தை கடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  பிரிந்து போன தனது மனைவியை சந்திக்க வேண்டும் என விமானத்தை கடத்திய நபர் கோரியுள்ளதாக அரசாங்க அதிகாரிகள் கூறியுள்ளனர்.

  இதனையடுத்து விமானத்தை கடத்தியவருடன், அவரின் முன்னாள் மனைவி பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுவருவதாக சைபிரஸ் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

  ஏகிப்து ஏயார் விமான கடத்தல் சம்பவம் பயங்கரவாதத்துடன் தொடர்புட்ட ஒன்றல்லவென சைபிரஸ் ஜனாதிபதி நிக்கோஸ் அனஸ்ரேஜ்ஜஸ் கூறியுள்ளார்.


  எகிப்தின் அலெக்ஸ்சாண்ரா பல்கலைகழகத்தின் கால்நடை மருத்துவ பிரிவின் பேராசியர் ஒருவரே குறித்த விமானத்தை கடத்தியுள்ளமை தெரியவந்துள்ளது.

   (முதலாம் இணைப்பு) -பயணிகள் விமானம் கடத்தல்? சைப்ரஸில் தரையிறக்கம்

  எகிப்து நாட்டின் பயணிகள் விமானம் ஒன்று தீவிரவாதிகளால் கடத்தப்பட்டிருப்பதாகவும், அது சைப்ரஸ் நாட்டில் தரையிறக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. 

  பயணிகள் விமானத்தை பயங்கரவாதிகள் கடத்தியிருக்கலாம் எனவும், விமானத்தில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. 

  குறித்த விமானம் எகிப்து நாட்டின் அலெக்சாண்ட்ரியாவில் இருந்து கெய்ரோ நகர் நோக்கி புறப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

  இதேவேளை, கடத்தப்பட்ட விமானம் சைப்ரஸ் நாட்டின் லார்நக்கா விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது எனவும் இதில் 80 பயணிகள் உள்ளதாகவும் வௌிநாட்டு ஊடகச் செய்திகள் குறிப்பிடுகின்றன.
  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: எகிப்து விமான கடத்தல் ஒரு பயங்கரவாத செயற்பாடு அல்ல என தகவல்! (2ம் இணைப்பு) Rating: 5 Reviewed By: Tamilkingdom
  Scroll to Top