சவால்களோடும், சாதனைகளோடும், இழப்புக்களோடும் நடந்தது - ஆனந்தபுர பெரும் சமர் - THAMILKINGDOM சவால்களோடும், சாதனைகளோடும், இழப்புக்களோடும் நடந்தது - ஆனந்தபுர பெரும் சமர் - THAMILKINGDOM
 • Latest News

  சவால்களோடும், சாதனைகளோடும், இழப்புக்களோடும் நடந்தது - ஆனந்தபுர பெரும் சமர்

  விடுதலை அல்லது வீரச்சாவு என்ற
  தாரக மந்திரத்தை உச்சரித்தபடி ஒவ்வொரு போராளிகளும் ,பொறுப்பாளர்களும், தளபதிகளும் அக்களத்தில் சாதனை படைத்தனர். பல நூற்று க்கணக்கான இராணுவத்தைக் கொன்று குவித்தனர்.

  உண்ண உணவு இல்லை, குடிக்க தண்ணீர் கூட இல்லை அனைத்து உதவிகளும் தடை செய்யப்பட்ட நிலையில் தமக்கேற்பட்ட சோர்வைக் கூட மறந்த நிலையில் தம்மிடம் இருந்த வளங்களை வைத்து சாவின் உச்சகட்டத்தில் கூட தர்மயுத்தம் நடத்தினார்கள். அக்களத்தில் போரிட்ட ஒவ்வொரு வீரர்களுடைய அழிக்க முடியாத வரலாறுகளும் அவர்களுடைய செங்குருதிகளால் அந்த மண்ணில் பதியப்பட்டது.

  ஆனந்தபுரம் மண்ணில் எமது தேசியத்தலைமையினை பாதுகாத்து மாவீரர்களான போராளிகள், பொறுப்பாளர்கள், தளபதிகள், பிரிகேடியர்களை நாங்கள் நினைவிற்கொள்கின்றோம்.இந்நிலையில் அன்று சிறீலங்காப்படையினரின் கொத்துக்குண்டு, நச்சுக்குண்டு, இரசாயன குண்டு மழைக்குள் நின்று களமாடி மாவீரர்களான வீரர்களையும் அன்றைய காலகட்டபகுதியில் உயிர்நீத்த பொதுமக்களையும் நினைவிற்கொண்டு இம்மாவீரர்களின் ஈகைக்களுக்கு மதிப்பளித்து தொடர்ந்தும் ஈழவிடுதலை பணியினை மேற்கொள்வோம்.

  போர்க்களங்களில் புயலாக நின்ற வீரன் பிரிகேடியர் மணிவண்ணன் தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் தன்னை இணைத்துக்கொண்ட மணிவண்ணன். தொடக்க காலத்திலேயே கேணல் ராயு அவர்களுடன் இணைந்து தனது விடுதலையின் பணியை மேற்கொண்டிருந்தார். “எங்கட உயிரைக் கொடுத்தாவது அண்ணையைக் காப்பாற்றணும்” பிரிகேடியர் ஆதவன் போராளிகளில் ஒருவனாக மாறி, கட்டளைகளைப் பிறப்பித்த வண்ணம் பல தடைகளை உடைத்து, தானே குறிபார்த்துச் சுட்டு, எதிரிகளை வீழ்த்திய வண்ணம் முன்னேறுகிறார் ஆதவன்.

  ‘என்னக்கா ? அண்ணா என்ன சொல்கிறார் ?’ பிரிகேடியர் துர்கா அன்பான முகம். சாந்தமான தோற்றம். எவரையும் பணிவுடன் அணுகும் அவரின் பண்பு. பல ஆயிரக்கணக்கான பெண்களை வழிநடத்தும் தலைமைத்துவப் பாங்கு. அனைத்தும் நிச்சயமாய் அவருக்கே தலைவரின் சிந்தனைக்குச் செயல் வடிவம் கொடுத்தவர் பிரிகேடியர் விதுசா விடுதலைப் புலிகளின் மகளீர் படைப் பிரிவின் தோற்றமும் வளர்ச்சியும் எழுச்சியும் எமது இயக்கம் படைத்த மாபெரும் சாதனைகளில் ஒன்று.

  பிரிகேடியர் தீபன் – 25 ஆண்டு காலம் ஓயாது அடித்துக்கொண்டிருந்த புயல்தளபதி தீபன், ஈழத்தமிழர் விடுதலைப் போராட்டத்தின் பல வெற்றிக்களங்களின் நாயகனாக, தாக்குதல் ஒருங்கிணைப்பாளனாக, எதிரிக்குச் சவாலாக விளங்கிய தளபதி. அந்த வீரத்தளபதியை எதிரியின் சமர்கள நாயகனுக்கு சளைக்காத சீடன் பிரிகேடியர் தீபன் அனைத்து உலக நாடுகளின் உதவியுடனும்,பாரிய படைக்கலன்களுடனும், எம் இனத்தை அழித்துக் கொண்டிருந்த சிங்கள இனவெறியர்களை முழுப் பலத்தையும் பிரயோகித்து புதுக்குடியிருப்பு

  தொடர்புடைய பதிவுகள்

  01.தலைவர் பிரபாகரன் பற்றி பிரிகேடியர் தீபனின் பதிவு
  ‘03.என்னக்கா ? அண்ணா என்ன சொல்கிறார் ?’ பிரிகேடியர் துர்க்கா

  04.தலைவரின் சிந்தனைக்குச் செயல் வடிவம் கொடுத்தவர் பிரிகேடியர் விதுசா
  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: சவால்களோடும், சாதனைகளோடும், இழப்புக்களோடும் நடந்தது - ஆனந்தபுர பெரும் சமர் Rating: 5 Reviewed By: Bagalavan
  Scroll to Top