ஜனாதிபதி மற்றும் பிரதமரின் தீபத் திருநாள் வாழ்த்துக்கள் - THAMILKINGDOM ஜனாதிபதி மற்றும் பிரதமரின் தீபத் திருநாள் வாழ்த்துக்கள் - THAMILKINGDOM
 • Latest News

  ஜனாதிபதி மற்றும் பிரதமரின் தீபத் திருநாள் வாழ்த்துக்கள்

  அனைத்து மக்களுக்கிடையிலும் நல்லிணக்க த்தையும் சகவாழ்வையும் ஏற்படுத்துவதே தீபத்திருநாளின் பிரார்த்தனை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

  ஜனாதிபதியினால் வெளியிடப்பட்டுள்ள தீபத் திருநாள் வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.நாட்டில் பல தசாப்பதங்களாக நிலவிவந்த பிரச்சினைகள் அகன்றுள்ள நிலையில் இந்த சந்தர்ப்பம் புத்தொளியை நோக்கி பயணிப்பதற்கான சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

  இதேவேளை, வேறுபடுவது எளிதாயினும் ஒன்றிணைந்து செயற்படுவது கடினமானதாகும் என பிரதமரின் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். எனவே நாட்டில் ஒற்றுமையை நிலைநாட்ட மக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

  இதேவேளை, துயரங்களை அனுபவித்த மக்கள் அவற்றிலிருந்து விடுபட்டு வாழ இந்த நன்நாளில் பிரார்த்திப்பதாக எதிர்கட்சித் தலைவர் இரா சம்பந்தன் தெரிவித்துள்ளார்.இதேவேளை நேற்று மாலையில் ஜனாதிபதி மாளிகையில், ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் தலைமையில் தீபாவளி சிறப்பு நிகழ்வுகள் இடம்பெற்றன.இதன்போது உலகெங்கும் வாழும் இந்துக்களுக்கு ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் தமது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர்.
  • Blogger Comments
  • Facebook Comments

  0 comments:

  Item Reviewed: ஜனாதிபதி மற்றும் பிரதமரின் தீபத் திருநாள் வாழ்த்துக்கள் Rating: 5 Reviewed By: Tamilkingdom
  Scroll to Top