யுத்தம் மற்றும் சமாதானத்தை குழப்பிக் கொள்ளவில்லை – மஹிந்த - THAMILKINGDOM யுத்தம் மற்றும் சமாதானத்தை குழப்பிக் கொள்ளவில்லை – மஹிந்த - THAMILKINGDOM
 • Latest News

  யுத்தம் மற்றும் சமாதானத்தை குழப்பிக் கொள்ளவில்லை – மஹிந்த

  தமது அரசாங்கம், ஒரே நோக்கத்தின் கீழ் செயற்பட்டதுடன், யுத்தம் மற்றும் சமாதனம் என்பவற்றை குழப்பிகொள்ளும் வகையில் செயற்பட்டதில்லை என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

  கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

  நாங்கள் அதிகாரத்தில் இருந்த காலத்தில் ஒரு இலக்குடனே செயற்பட்டோம். எமது அரசாங்கம் இரண்டு பக்கம் இழுப்பட்டதில்லை.நாங்கள் யுத்தம் சமாதானம் என்பவற்றை குழப்பிக்கொள்ளவில்லை.யுத்தம் என்றால் யுத்தம், சமாதானம் என்றால் சமாதானம் என்ற கொள்கையிலேயே செயற்பட்டோம் எனவும் மஹிந்த ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார்.
  • Blogger Comments
  • Facebook Comments

  0 comments:

  Item Reviewed: யுத்தம் மற்றும் சமாதானத்தை குழப்பிக் கொள்ளவில்லை – மஹிந்த Rating: 5 Reviewed By: Tamilkingdom
  Scroll to Top