யாழ். பல்கலைக்கழகக் கல்விசாரா ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் - THAMILKINGDOM யாழ். பல்கலைக்கழகக் கல்விசாரா ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் - THAMILKINGDOM

 • Latest News

  யாழ். பல்கலைக்கழகக் கல்விசாரா ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில்

  யாழ். பல்கலைக்கழகக் கல்விசாரா ஊழியர்கள், இன்று திங்கட்கிழமை முதல் காலவரையறையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  


  யாழ். பல்கலைக்கழகக் கல்விசாரா ஊழியர்களால் ஏற்கெனவே முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் தொடர்பில் போதுமான முன்னேற்றங்கள் இல்லாத காரணத்தினாலே வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக யாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் தலைவர் சி. தங்கராஜா குறிப்பிட்டுள்ளார்.

  தமது கோரிக்கைக்கு தீர்வு கிடைக்கும் வரை தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக யாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் தலைவர் சி. தங்கராஜா தெரிவித்துள்ளார்.

  யாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் வேலை நிறுத்தப் போராட்டத்தினால் பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: யாழ். பல்கலைக்கழகக் கல்விசாரா ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் Rating: 5 Reviewed By: Tamilkingdom
  Scroll to Top