மாங்குளத்தில் விபத்து: 13 பேர் படுகாயம் - THAMILKINGDOM மாங்குளத்தில் விபத்து: 13 பேர் படுகாயம் - THAMILKINGDOM

 • Latest News

  மாங்குளத்தில் விபத்து: 13 பேர் படுகாயம்  மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முறிகண்டி பிரதேசத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை ஏற்பட்ட பாரிய வாகன விபத்தில் நான்கு பெண்கள் உள்ளடங்கலாக 13 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் நால்வர் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

  முறிகண்டி 246வது மைல் கல் பகுதியில், யாழ்.நோக்கி பயணித்த அரச பேருந்தின் பின்னால் மல்லாவியிலிருந்து கீரிமலைக்குச் சென்ற பேருந்து மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

  காயமடைந்தவர்கள் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு, மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: மாங்குளத்தில் விபத்து: 13 பேர் படுகாயம் Rating: 5 Reviewed By: Tamilkingdom
  Scroll to Top