Breaking News

புதிய தலைமை தேவைப்படலாம்-விக்கியின் பதில்(காணொளி)

அண்மைய கிழக்கு எழுக தமிழ் தொடர்பிலும் அண்மைய

அரசியல் அரங்கில் நடைபெற்று வரும் சம்பவங்கள் தொடர்பிலும் அண்மையில் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு வடமாகாண முதலமைச்சர் பதிலளித்திருந்தார்.

அதன்போது பத்திரிகையாளர் ஒருவர் கேட்ட கேள்வி எழுக தமிழில் பேசிய சுரேஸ் பிரேமச்சந்திரன் அவர்கள் புதிய தலைமைத்துவம் ஒன்றை முதலமைச்சரின் கீழ் வழிநடாத்தப்படவேண்டும் என பேசியிருந்தார். இது தொடர்பில் புதிய தலைமைத்துவம் தேவையா உங்கள் நிலைப்பாடு என்ன என ஒரு ஊடகவியலாளர் வினவியபோதே சற்று யோசித்த விக்கினேஸ்வரன் சிலவேளை தேவைப்படலாம் என பதிலளித்திருந்தார்.

இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பேச்சுவார்த்தை தொடர்பிலும் கேட்கப்பட்டபோது மகிந்தவோடும் எமது தலைமைகள் 16சுற்று பேச்சுவார்த்தை நடாத்தினார்கள் தேனீர் அருந்தி சிற்றுண்டிகளும் சாப்பிட்டு வந்தார்கள் அதில் என்ன நடைபெற்றதுஎன யாருக்கு தெரியாது. அதிலிருந்து என்ன கிடைத்தது எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

நாம் பொதுநோக்கிற்காக நேர்மையாக பயணிக்கும்போது ஒவ்வொருத்தராக எம்மோடு சேருவார்கள் இப்போது வியாழேந்திரன் எம்மோடு சேர்ந்திருக்கிறார் இனி ஒவ்வொருதராக த.ம.பேரவைக்கு ஆதரவளிப்பார்கள் எனவும் கூறியிருந்தார்.



முக்கியமான செய்திகளை உடனுக்குடன்  அறிந்திட Fallow ஐ கிளிக் செய்யுங்கள்