யாழ்ப்பாணம் வருகின்றார் சுப்பர்ஸ்ரார் ரஜினிகாந் - THAMILKINGDOM யாழ்ப்பாணம் வருகின்றார் சுப்பர்ஸ்ரார் ரஜினிகாந் - THAMILKINGDOM

  • Latest News

    யாழ்ப்பாணம் வருகின்றார் சுப்பர்ஸ்ரார் ரஜினிகாந்


    லைக்கா நிறுவனத்தின் ஞானம் அறக்கட்டளையின்
    சார்பில் இலங்கையின் வவுனியாவில் அமைக்கப்பட்டுள்ள 150 வீடுகளை தமிழ் மக்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சியில் சுப்பர்ஸ்ரார் ரஜினிகாந்த் கலந்துகொண்டு வீடுகளை மக்களிடம் வழங்குகிறார்.

    வவுனியாவின் சின்ன அடம்பன் கிராமம் மற்றும் புளியங்குளம் ஆகிய இடங்களில் 150 வீடுகளை, அப்பகுதியில் உள்ள இடம்பெயர்ந்த தமிழ் மக்களுக்கு இலவசமாக அமைத்துக் கொடுக்கிறது ஞானம் அறக்கட்டளை. லைக்கா நிறுவனத் தலைவர் அல்லிராஜா சுபாஸ்கரனின் தாயார் ஞானாம்பிகை அவர்களின் பெயரில் அமைக்கப்பட்டுள்ள அறக்கட்டளை இது.

    இந்த வீடுகளை மக்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி எதிர்வரும் ஏப்ரல் மாதம் 09 ஆம் திகதி இலங்கையின் யாழ்ப்பாணம் நகரில் நடைபெறவுள்ளது. விழாவில் நேரில் கலந்துகொண்டு 150 பயனாளிகளுக்கு ஞானம் அறக்கட்டளையினால் அமைக்கப்பட்ட வீடுகளை சுப்பர்ஸ்ரார் ரஜனிகாந்த் வழங்கி வைக்கிறார்.

    இலவச வீடுகள் வழங்கும் இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள வேண்டும் என சுப்பர் ஸ்ரார் ரஜினிகாந்த் அவர்களிடம் கேட்ட போது ஈழத் தமிழர்களுக்கான நிகழ்ச்சி என்ற காரணத்தால் உடனே மகிழ்ச்சியுடன் இலங்கைக்கு சமூகமளிக்க சம்மதித்தார். அவர் இது போன்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்வது இதுவே முதல் முறையாகும்.

    இந்த நிகழ்ச்சியில் இலங்கையின் வட மாகாண முதல்வர் சீ.வி. விக்னேஸ்வரன், இலங்கைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், மலேசிய சென்ட் தலைவர் எஸ். விக்னேஸ்வரன், பிரிட்டனின் அனைத்துக் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர் திரு.ஜேம்ஸ்பரி, மற்றும் ஜஸ்டிஸ்கமிட்டி உறுப்பினர் திரு .கீத்வாஸ் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

    முக்கியமான செய்திகளை உடனுக்குடன்  அறிந்திட Fallow ஐ கிளிக் செய்யுங்கள்





    • Web site Comments
    • Facebook Comments
    Item Reviewed: யாழ்ப்பாணம் வருகின்றார் சுப்பர்ஸ்ரார் ரஜினிகாந் Rating: 5 Reviewed By: Bagalavan
    Scroll to Top